AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கௌரி ஹெக்டேவாக தபு.. விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் பட புது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

Slumdog Movie: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெலுங்கில் நாயகனாக நடித்துள்ள புது திரைப்படம்தான் ஸ்லம்டாக் -33 டெம்பிள் ரோடு. இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை தபு நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில், அவரின் கதாபாத்திர அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

கௌரி ஹெக்டேவாக தபு.. விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் பட புது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
தபுவின் ஸ்லம் டாக் மூவிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Aug 2026 15:35 PM IST

தமிழ் சினிமாவில் பேன்ஸ் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிறது. அந்த விதத்தில் இவர் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு (Slumdog – 33 Temple Road). இதை தெலுங்கு இயக்குநரும், தயாரிப்பளாருமான பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கியுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் என்ற திரைப்படத்தை இயக்கி வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்லம்டாக் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் பாலிவுட் நடிகை தபு நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், நடிகை தபுவின் கதாபாத்திர அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரை சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோ

நடிகை தபுவின் கதாபாத்திர அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட ஸ்லம்டாக் படக்குழு:

நடிகை தபு ஸ்லம்டாக் திரைப்படத்தில் நெகட்டிவ் சார்ந்த வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. பயமின்மை, அதிகாரம் மற்றும் யாரையும் கண்டு அஞ்சாத ஒரு வருமானவரித்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் “கௌரி ஹெக்டே” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அஜித் குமாருடன் முதல்முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சங்கர்? வைரலாகும் தகவல்

விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு சேரி பகுதியில் வாழும் ஒரு நபராக நடித்துள்ளதாக தெரிகிறது. கஷ்டப்படும் மற்றும் ஏழை மக்களுக்கு அவர் பண உதவி வழங்கும் நாயகனாக நடித்துள்ளாராம். இதில் அவருடன் விடிவி கணேஷ், துனியா விஜய் குமார், ப்ரஹ்மஜி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடிக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பில் தொடர்ந்து புது புது படங்கள் உருவாகிவருகிறது. இதில் ஸ்லம்டாக் படத்தை வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us