விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
Vijay Sethupathi and Balaji Tharaneetharan:தென்னிந்திய மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து புது படங்களில் பிசியாக இருந்துவருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் பட இயக்குநர் பாலாஜி தரணீதரனுடன் புது படம் ஒன்றில் இவர் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டுவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இப்படத்தை அடுத்ததாக புது புது படங்களில் விஜய் சேதுபதி இணைந்து நடித்துவந்தார். அதில் அட்லீ (Atlee) தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி தரணீதரனின் (Balaji Tharaneetharan) இயக்கத்திலும் புது படம் ஒன்றில் இணைந்திருந்தார். இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாகிவந்தது. இதை இயக்குநர் அட்லீ தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறதாம். அந்த வகையில் இப்படத்திலிருந்து பெரிதாக எந்த அப்டேட்டுகளும் வெளியாகவில்லை. தற்போது இதன் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது தொடர்பாக இணையத்தில் தகவல் ஒன்று பரவிவருகிறது.




இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ரீசென்ட் போட்டோ
விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரனின் புது பட ரிலீஸ் எப்போது:
இயக்குநர் பாலாஜி தரணீதரன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சீதக்காதி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் – வைரலாகும் பதிவு
இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் படக்குழு இப்படத்திற்கு “பக்தா” என டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது சிறப்பான மற்றும் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ளதாம். இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
விஜய் சேதுபதியின் பக்தா பட ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:
#VijaySethupathi is currently starring in #Baktha, directed by #BalajiTharaneetharan and produced by Atlee. The film has music by #SaiAbhyankkar and is scheduled to release on October 1st. pic.twitter.com/Njiah4L6mJ
— Movie Tamil (@_MovieTamil) August 8, 2026
விஜய் சேதுபதியின் புது படங்கள் :
தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் என்ற படத்திலும், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின், வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் பாக்கெட் நாவல் போன்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதை பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.