ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் – வைரலாகும் பதிவு
Bethlehem Kudumba Unit movie | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தன் மூலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் நடித்து வரும் நடிகர் நிவின் பாலி அவ்வபோது தமிழ் மொழியிலும் படங்களில் நடித்து வருகின்றார். அதன்படி தமிழ் மொழியில் அடுத்ததாக நடிகர் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக மலையாள சினிமாவில் வெளியாக உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட்.
மலையாள சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடி வருகின்றது. அந்த வகையில் தற்போது அடுத்ததாக வெளியாக உள்ள பெத்தலேக குடும்ப யூனிட் படம். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். இவர் தென்னிந்திய மொழிகளில் தற்போது பிசியாஜ நாயகியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது.




ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம்:
இந்த ஆக்ஸ்ட் மாதத்தில் மட்டும் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் மலையாள சினிமாவில் பெத்தலேக குடும்ப யூனிட் ஆகியப் படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி இந்த பெத்தலேக குடும்ப யூனிட் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் நடிகர் நிவின் பாலி வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… கில்லர் படத்தில் என்னை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரசிகர்கள் காண்பார்கள் – நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Your Onam Plan is here 🎬#BKU releasing 21 August , 2026
See you in theatres ❤️@_mamithabaiju @BhavanaStudios #NivinPauly #MamithaBaiju #BKU #BethlehemKudumbaUnit #Onam2026 #August21 pic.twitter.com/Wp4xKM52Lr
— Nivin Pauly (@NivinOfficial) August 7, 2026
Also Read… அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார்