AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மணிகண்டனின் புதுப் படத்தின் டைட்டில் மக்கள் காவலன் – வைரலாகும் போஸ்டர்!

Manikandans new film has been set as Makkal Kaavalan | நடிகர் மணிகண்டனின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு மக்கள் காவலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணிகண்டனின் புதுப் படத்தின் டைட்டில் மக்கள் காவலன் – வைரலாகும் போஸ்டர்!
மக்கள் காவலன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2026 20:19 PM IST

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் மணிகண். எழுத்தாளராக தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமான இவர் முன்பு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகர் மணிகண்டன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகியப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குடும்பஸ்தன்.

இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அவர் நடிக்கும் புதுப் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

மணிகண்டனின் புதுப் படத்தின் டைட்டில் மக்கள் காவலன்:

அதன்படி நடிகர் மணிகண்டனின் நடிப்பில் தற்போது உருவாக உள்ள படத்திற்கு மக்கள் காவலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் போஸ்டரில் நடிகர் மணிகண்டன் காவல்துறை அதிகாரியின் உடையில் இருக்கிறார். மேலும் படத்தின் டைட்டிலில் மக்கள் காவலன் என்று பெயர் வைத்துள்ளதால் மக்களுக்கான ஒரு காவல் துறை அதிகாரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தினை இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மூடர் கூடம் 2 படக்குழு

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் படிக்கும் போது எனக்கு இங்கிலீஸ் தெரியாது… ஆனால் – நடிகர் தனுஷ் பேச்சு

Follow Us