ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மூடர் கூடம் 2 படக்குழு
Moodar Koodam 2 Movie First Look Poster | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் மூடர் கூடம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் நவீன். இவர் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராவும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மூடர் கூடம். இந்தப் படத்தினை இயக்கி நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நவீன். ஆக்ஷன் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் நவீன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி நடிகர்கள் சென்ட்ராயன், குபேரன், ராஜாஜ், ஓவியா, ஜெயபிரகாஷ், அனுபமா குமார், உதய் மகேஷ், ஐந்து நட்சத்திர கிருஷ்ணா, சிந்து நவீன், பாஸ்கர், சஞ்சீவி, சபீஷ், மானசா, வின்கோ பிரகாஷ், பாபி தேஜய், ஆதிரா, ராஜ ரிஷி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான வைட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பாக நவீன் இந்தப் படத்தை தயாரித்து உள்ளார்.




ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மூடர் கூடம் 2 படக்குழு:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள் முடிவடைந்து 13-வது ஆண்டை தொட உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக உள்ளது. இந்தப் மூடர் கூடம் 2 படத்தில் முதல் பாகத்தில் உள்ள படக்குழுவினர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ட்ரெய்ன் படத்தின் ரிலீஸ் தாமதமாக இதுதான் காரணம் – நடிகர் விஜய் சேதுபதி
மூடர் கூடம் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The fools gathered again #MoodarKoodam2 #MISSIONPOSSIBLE 💥
Stay tuned till 5:55 PM – We have more to come 💃🏻
(Tamil & Telugu Release)@NaveenFilmmaker @grandelpictures @SamkitBohra_ @bKamalBohra @OviyaaSweetz @Actorsenrayan #JayaPrakash @Rajajmanickam #Kuberan… pic.twitter.com/Wa6D6hFx7l
— Grandel Pictures (@grandelpictures) August 5, 2026
Also Read… Ajith: ரேஸராக அஜித்.. கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!