முன்பு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன் – இயக்குநர் ஜூட் ஆண்டனி
Director Jude Anthany Joseph said I was planning film with Sivakarthikeyan | தமிழ் சினிமாவில் பிரல நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து முன்னதாக தான் படம் இயக்க நினைத்தேன் என்று இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளராக வலம் வருகிறார் ஜூட் ஆண்டனி ஜோசஃப். இவர் பன்முகத் தன்மை கொண்டவராக மலையாள சினிமாவில் வலம் வருகிறார். தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் என பிசியாக வலம் வரும் ஜூட் ஆண்டனி இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எழுதி இயக்கிய பிரேமம் படத்தில் ஒரு பிரபல கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து இயக்குநராகவும் பிசியாக வலம் வரும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்குநராக கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஓம் சாந்தி ஓசானா என்ற படத்தினை இயக்கி இருந்தார். நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கதில் அடுத்தடுத்துப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக மலையாள சினிமாவில் துடக்கம் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முன்பு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன்:
மேலும், சிவகார்த்திகேயனுடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கவும் நான் திட்டமிட்டிருந்தேன். பல விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருந்ததால், அதிகப்படியான திட்டமிடல் காரணமாக எதையும் முழுமையாக முடிக்க முடியவில்லை. இது சரியான அணுகுமுறை அல்ல என்பதை நான் அப்போது உணர்ந்தேன். 2018 படத்திற்கு முன்பு, எனது பணிமுறை மிகவும் எளிமையாக இருந்தது. திரைக்கதை எழுதுவது, படத்தை படமாக்குவது, வெளியிடுவது, ரசிகர்களின் வரவேற்பை ரசிப்பது, பின்னர் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஓய்வு எடுப்பது என இருந்தது.
அதன்பிறகே அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்குவேன். ஆனால், 2018 படத்திற்குப் பிறகு படங்களை இயக்குவதற்கான அழைப்புகளும் வாய்ப்புகளும் அதிகம் வந்ததால், ஒரே நேரத்தில் பல திட்டங்களை உருவாக்கத் தொடங்கினேன். இதன் விளைவாக, எந்தப் படத்தை முதலில் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாத மனநிலையில் இருந்தேன். அப்போதுதான் இந்தப் படம் என்னை வந்தடைந்தது. இது மிகவும் எளிமையான ஒரு படமாக இருந்தது.
Also Read… ரியோவின் சூப்பர்ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஜீவா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகு எக்ஸ் தள பதிவு:
Dir #JudeAnthanyJoseph Recent Interview
– In addition, I was planning a Tamil film with #Sivakarthikeyan. I was working on many things, but nothing was getting completed because I was making too many plans. Then I realized that this was not the right way.
– Before 2018, my… pic.twitter.com/0PVe025ZIn
— Movie Tamil (@_MovieTamil) August 3, 2026
Also Read… Maaveeran 2: சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 உருவாகுவது உறுதி.. வைரலாகும் அப்டேட்!



