நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்.. காதலனை அறிமுகம் செய்த மிருணாளினி ரவி!
Mirnalini Ravi Instagram: கோலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ஒரே பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மிருணாளினி ரவி. இவர் காதலித்துவருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக தனது காதலனை அறிமுகம் செய்துள்ளார். விரைவில் திருமணம் செய்வதையும் உறுதிசெய்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி (Mirnalini Ravi). இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சேட்டு என்ற ஏலியன் பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் 2019ம் ஆண்டில் கட்டலகொண்டா கணேஷ் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின், தமிழிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்தார். இதையடுத்து இயக்குநர் ஆனந்த் சங்கர் (Anand Shankar) இயக்கத்தில் எனிமி (Enemy) என்ற படத்தில் மெயின் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இந்த படத்தில் “மால டும்டும்” பாடலில் நடனமாடி மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பின், தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றில் நடித்துவருகிறார். இவர் சமீபகாலமாக காதலித்துவருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தனது காதலனை அறிமுகம் செய்துள்ளார்.




இதையும் படிங்க: தென்னிந்திய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வரிசைக் கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ
நடிகை மிருணாளினியின் காதலன் யார் தெரியுமா?:
நடிகை மிருணாளினி ரவி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபகாலமாக காதலித்துவருவதாக கூறப்பட்ட நிலையில், அது யார் யார் என எதிர்பார்க்கப்பட்டது. சீகிரெட்-ஆக தனது காதல் வாழ்க்கையை தொடர்ந்துவந்த அவர், தற்போது தனது காதலனை அறிமுகம் செய்துள்ளார். மகாவிஷ்ணு பரம்பொருள் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், ன்னேகனள காதலிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செலிபிரேஷன் மாதம்.. புது புரோமோ வீடியோவை பகிர்ந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு!
தனது காதலனை அறிமுகம் செய்து நடிகை மிருணாளினி ரவி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் மிருணாளினி ரவி, உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நானே நேசிப்பது போல உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகபரவி வருகிறது. தற்போது இவரும் படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டு வருகிறாராம். தற்போது இவர் காதலித்துவருவதாக அறிவித்துள்ள நிலையில், அதை தொடர்ந்து விரைவில் திருமணம் செய்யவுள்ளாராம். விரைவில் திருமண தேதியை மக்களிடையே அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள்.