அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
EPS on Aadhav Arjuna : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செப்டம்பர் 19, 2026 இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய அவர், தன்னிடம் ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் என்று தெரிவித்தார்.
சேலம், செப்டம்பர் 19 : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செப்டம்பர் 19, 2026 இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய அவர், தன்னிடம் ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் என்று தெரிவித்தார். மேலும் தவெகவிற்கு அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டதாகவும் விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் மாநகர் அதிமுக சார்பில் தாதகாப்பட்டி கேட் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தீர்கள். அடுத்தது விசிகவிடம் போனீர்கள். அதன் பிறகு என்னைச் சந்தித்தீர்கள். என்னிடம் அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். ‘தம்பி, அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது. உழைப்பவர்களுக்குத்தான் பதவி கிடைக்கும்’ என்று சொன்னேன். அதற்குப் பிறகு தவெகவிற்குச் சென்றார். அந்தக் கட்சியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். நீங்கள் அதிமுகவை பற்றி பேசலாமா? என்று பேசினார்.
இதையும் படிக்க : மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!




மேலும் பேசிய அவர், அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. தவெக தொடர்ந்து ஆட்சியில் இருக்குமா இருக்காதா என்பதை போகப்போக பார்த்துக்கலாம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதிமுக. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் என்றார்.
இதையும் படிக்க : ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!
முன்னதாக மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் ஆதவர் அர்ஜூனா, கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை. அதனை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது என்றார்.