உதயநிதி பெரிய ஆள் இல்லை… இபிஎஸை தோற்கடிப்போம்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna’s Comment on EPS : மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் செப்டம்பர் 19, 2026 இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜூனா, உதயநிதியைக் கைது செய்யும் எண்ணமே எங்கள் முதல்வருக்கு இல்லை. அவர் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை என்றார்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் செப்டம்பர் 19, 2026 இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… எங்களுடைய தலைவர்வழியில் இடைத்தேர்தலில் வாக்குக்கு தவெக காசு கொடுக்காது. இத்தனை காலம் பாரம்பரியமாக இருந்த வாக்குக்கு காசு என்ற கலாசாரத்தை உடைப்போம் என்றார்.
மேலும் பேசிய அவர், எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 அமைச்சர்கள் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார் என்றால், சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக இங்கே டிபாசிட் இழக்கும். கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள். என்றார்.
இதையும் படிக்க : ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!




மேலும், சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை. அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள். என்றார்.
‘எடப்பாடியில் ஈபிஎஸ்-யை தோற்கடிப்போம்’
“தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக ஈபிஎஸ் சொல்கிறார். எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது என்றார்.
“உதயநிதியைக் கைது செய்யும் எண்ணமே எங்கள் முதல்வருக்கு இல்லை. அவர் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. நாடு முழுக்க எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசலாமா என்று டிவியில் கேட்டனர். திமுகவினரைக் கைது செய்ய முடியாது, தொட்டால் அவ்வளவுதான் என்று கடந்த காலங்களில் இருந்தார்கள். பெண்களைக் கொச்சைப்படுத்தினால் கைது என்பதை காட்டத்தான், 10 மணி நேரம் அழைத்துச் சென்று விசாரிக்கும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை என 10 நிமிடத்தில் அனுப்பியாச்சு” என்றார்.
இதையும் படிக்க : இடைத்தேர்தல் களம் சூடானது.. 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை இறக்கி திமுக, அதிமுகவை அதிரவைத்த முதல்வர் விஜய்!!
கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை. அதனை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது என்றார்.