Vijay Sethupathi: டாஸ்கில் லீடர் என்ற அட்வான்டேஜ்.. ஷமாவை வெளுத்துவாங்கிய விஜய் சேதுபதி!
Bigg Boss Season 10 Promo: இன்று (19/09/2026) பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 2வது வாரத்தின் இறுதியான நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். அந்த விதத்தில் இன்று போட்டியாளர்கள் விஜய் சேதுபதி சந்தித்த நிலையில், ஷமாவை சாடியுள்ளார். டாஸ்கில் போட்டியிடாமல் வீட்டின் தலைவி என்ற பதவியை தவறாக பயன்படுத்தியது பற்றி வெளுத்துவங்கியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 13 நாட்களான நிலையில், வார இறுதியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து அவர்களை வெளுத்தெடுப்பது வழக்கமே. அந்த விதத்தில் கடந்த வாரத்தில் சாத்விகாவை விமர்சித்த நிலையில், இந்த வாரத்தில் ஆனந்தியை விமர்சித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி இருவாரங்களான நிலையில், இப்போதே பல பிரச்சனைகள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் பகையும் உருவாகிவருகிறது. அந்த விதத்தில் இன்று (19/09/2026) விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்த நிலையில், இந்த வராத்தின் வீட்டின் தலைவியாக ஷமா (Shama), டாஸ்கில் தனது தலைவி பதிவியை துஸ்பிரயோகமாக பயன்படுத்தியது பற்றி விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வெளுத்துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சில நொடிகளுக்குள்ள முடிவெடுப்பதுதான் முக்கியம்.. வெளியானது அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்!




வீட்டின் தலைவி ஷமாவை வெளுத்துவங்கிய விஜய் சேதுபதியின் பிக்பாஸ் புரோமோ:
இந்த புரோமோவில் ஷமா, விஜய் சேதுபதியிடம் உடல் வலிமையான டாஸ்கில் எப்படி நாங்கள் ஜெயிக்க முடியும், ஆண்கள் உடல் வலிமை அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள்தானே ஜெயிக்க முடியும். அதனால் எனக்கு அதை பண்ணமுடியாது, அதனால அதை பயன்படுத்தினேன் என பேசியிருந்தார். இதனால் வெறுப்பான விஜய் சேதுபதி, எதுனாலும், எதாவது பேச்சை வளர்ப்பதும் எதாவது கொண்டுவாரிங்க, வலிமையான டாஸ்க் பண்ணமுடியவில்லை என்றால், அப்போது ஏன் பிக் பாஸுக்கு வாரிங்க என கோபமாக பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ராக்கா படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்க்கப்போகிறார்.. அட்லீ குறித்து சிபி சக்கரசவர்த்தி பேச்சு!
இந்தவாரத்தில் பிக் பாஸ் ஈசன் 10ல் வெளியேறுவது யார் :
கடந்த 2 வாரங்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிளாக் பாண்டி முதலில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு மேலும் இந்த வாரத்தில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் ஜாவித் வெளியேற்றப்பட்டிருந்தார். மேலும் இந்த வாரத்தில் வேறுயாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என கூறப்படுகிறது. மேலும் வரும் வாரத்தில் மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளர் நுழைவார் என கூறப்படுகிறது.