AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Kumar: சில நொடிகளுக்குள்ள முடிவெடுப்பதுதான் முக்கியம்.. வெளியானது அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்!

Gladiators Documentary Trailer: தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கிவந்து, தற்போது இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக உலகமெங்கும் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டுவருபவர் அஜித் குமார். இவரின் கார் ரேஸ் கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar: சில நொடிகளுக்குள்ள முடிவெடுப்பதுதான் முக்கியம்.. வெளியானது அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்!
கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2026 18:28 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) சினிமாவில் நாயகனாக திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், கடந்த 2024ம் ஆண்டின் இருகியிலிருந்து கார் ரேஸ் (Car race) பயிற்சியில் ஈடுபட தொடங்கியிருந்தார். மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி மதத்திலிருந்து கார் ரேஸ் போட்டிகளில் இவர் போட்டியாளராக பங்குபெற்றுவரும் நிலையில், உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியினருடன் கலந்துகொண்டு வந்தார். இவரின் கார் ரேஸ் அணிக்கு ரெட்அன்ட் (RedAnt) என பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதுவரை மலேசியா முதல் லண்டன் வரை பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவந்தார் கார் ரேஸில் அஜித் குமார் தனது அணியினருடன் கலந்துகொண்டிருந்தார். இதில் பல நாடுகளில் நடந்த போட்டியில் வெற்றிக்கோப்பைகளையும் பெற்றுள்ளார்.

அந்த விதத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக முழுமையாக கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளில் அஜித் இருந்துவரும் நிலையில், இவரின் கார் ரேஸ் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு “கிளாடியேட்டர்ஸ்” (Gladiators) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் திரையரங்குகளில் நேரடியாக திரையிடப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் இதை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த தலைமுறையினர் அரசியலில் வலுவாக இருக்க விஜய் காரணமாக இருப்பார் – இயக்குநர் அட்லி

அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லரை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சுரேஷ் சந்திரா:

இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமானது அஜித்தின் கார் ரேஸ் போட்டிகள் மற்றும் கார் ரேஸ் பயிற்சிகள் இதில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் அஜித்தின் கார் ரேஸ் விபத்துகளும் இதில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை இப்படத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை சேர்த்துள்ளது. இந்த ட்ரெய்லர் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக்பாஸில் விஜய் சேதுபதியிடம் கம்ப்ளெயிண்ட் செய்த ஆனந்தி.. கலாய்த்து பேசிய லட்சுமி பிரியா – முனியம்மாள்.. வைரலாகும் புரோமோ!

அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்பட ரிலீஸ் எப்போது:

இந்த ஆவணப்படத்தை தமிழ் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, அஜித் குமாரின் புதிய தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்துள்ளது. அஜித் குமார் கலந்துகொண்ட பல்வேறு கார் ரேஸ் போட்டிகளை ஒன்றாக தொகுத்து, இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இதில் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆணவப்படமானது 2026ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறதாம். இந்நிலையில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு முன் இந்த ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us