அடுத்த தலைமுறையினர் அரசியலில் வலுவாக இருக்க விஜய் காரணமாக இருப்பார் – இயக்குநர் அட்லி
Director Atlee talks about Vijay politics | தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லி. இவர் சமீபத்தில் பத்தா பட விழாவில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லி தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக வலம் வருகிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர் தளபதி விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கினார். அந்த மூன்று படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஹார்ட்ரிக் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கினார். அந்த ஜவான் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்று பாலிவுட் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பான் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பத்தா. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிலையில் அந்த விழாவில் அட்லி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இளைஞர்கள் அரசியலில் வலுவாக இருக்க விஜய் காரணமாக இருப்பார்:
விஜய் அண்ணாவால்தான் அடுத்த தலைமுறை அரசியலில் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருக்கும். எனக்கு அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லை. நான் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவன்; நான் ஒருபோதும் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, ஐந்து வயதுக் குழந்தைகள் கூட சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. விஜய் அண்ணா ஒரு வலுவான தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
‘அரசியல் நமக்கு ஏற்றதல்ல’ என்று சிலர் சொல்வார்கள். அது தவறான கருத்து. அரசியல் நமக்கானதுதான். அதை எப்படி, எந்த அளவில் அணுக வேண்டும் என்பது நம்முடைய புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது; இதில் யாரும் நம்மைத் திசைதிருப்ப முடியாது. சமூகத்திற்கு எது சரியோ, அதைத்தான் நாங்கள் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… அடுக்கடுக்காக டாஸ்க் கொடுத்த வினோத் பாபு.. அதிரடியாக மிரட்டிய மணிவண்ணன்.. பரபரப்பில் பிக் பாஸ்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“The next generation will be solid in politics only because of #Vijay Anna. I’m not related to politics. I was in the previous generation; I have never seen my Assembly. Now I can see a data of 5-year-old watching the Assembly. Vijay Anna is creating a solid generation.
They’ll…
— Movies Singapore (@MoviesSingapore) September 18, 2026