AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது திரிஷா இல்லனா நயன்தாரா படம் – கொண்டாடும் ரசிகர்கள்

11 Years Of Trisha Illana Nayanthara Movie | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது திரிஷா இல்லனா நயன்தாரா படம் – கொண்டாடும் ரசிகர்கள்
திரிஷா இல்லனா நயன்தாராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Sep 2026 15:59 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக இந்தப் படம் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். அதன்படி நடிகைகள் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் என இரண்டு பேர் நடித்து இருந்தனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், VTV கணேஷ், யுகி சேது, ஜி.மாரிமுத்து, ரோபோ சங்கர், சண்முகசுந்தரம், ஜோதி லட்சுமி, லொள்ளு சபா மனோகர், குழந்தை ஹரிஹரன், ஆர்யா, பிரியா ஆனந்த், ஆதிக் ரவிச்சந்திரன், அகிலன் புஷ்பராஜ் மற்றும் ஜெயன் விக்னேஷ் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததைப் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

11 ஆண்டுகளை நிறைவு செய்தது திரிஷா இல்லனா நயன்தாரா படம்:

இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு காதல் செய்வதே லட்சியமாக உள்ளது. இவர் அடுத்தடுத்து இரண்டு காதல்களை செய்கிறார். அந்த இரண்டில் எது தன்னுடைய உண்மையான காதல் என்பதை அவர் கண்டறிந்து அந்த காதலுடன் எப்படி சேர்கிறார் என்பது படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர்.

Also Read… தமிழ் – இந்தி… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது – லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒரு கத சொல்லட்டுமா… தங்களின் சொந்த வாழ்க்கை கதையை சொன்ன போட்டியாளர்கள் – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!

Follow Us