நாளை ஓடிடியில் வெளியாகும் மொத ராத்திரி படம் – வைரலாகும் அப்டேட்
Modha Rathiri Movie OTT Update | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மொத ராத்திரி. இந்தப் படம் நாளை முதல் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த ஆண்டில் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. சின்ன சின்ன பட்ஜெட்களில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் திரையரங்குகளில் மட்டும் இன்றி தொடர்ந்து ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மொத ராத்திரி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் ராஜா கருப்புசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ரிஷி காந்த் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை அனிஷ்மா அனில்குமார் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




நாளை ஓடிடியில் வெளியாகும் மொத ராத்திரி படம்:
இந்த மொத ராத்திரி படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி படம் நாளை 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆன இளம் ஜோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படம் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ராஜமௌலியுடன் வேலை செய்த எனது சக நடிகர்கள் என்னை பயமுறுத்தினார்கள் – மகேஷ் பாபு!
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
This is not a wedding story, this is a first night story 🤭😝 pic.twitter.com/A7AYcWi5g3
— Netflix India South (@Netflix_INSouth) September 16, 2026
Also Read… DSP: எல்லம்மா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை? அட இவரா?