ராயன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்
Sundeep Kishan talks about Raayan movie | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சந்தீப் கிஷன் தற்போது தமிழ் சினிமாவில் சிக்மா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் ராயன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு மொழியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது தமிழ் மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான யாரடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியில் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற, கேப்டன் மில்லர் மற்றும் ராயன் ஆகியப் படங்களில் நடித்து உள்ளார். இந்தப் படங்களில் சில தோல்வியை சந்தித்தாலும் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் தற்போது சிக்மா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் ராயன் படத்தில் நடித்தது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ராயன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்:
எனக்கு தனுஷ் அண்ணாவை மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, எனது அடுத்த படத்தை நானே இயக்கப் போகிறேன். அதில் என்னுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நீங்களும் நடிக்க வேண்டும் என்று தனுஷ் அண்ணா என்னிடம் கூறினார். படம் வெளியான பிறகு அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் மாநகரம் மற்றும் மைக்கேல் படங்களில் நான் நடித்தது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே நானும் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SundeepKishan about #Raayan
– I like #Dhanush anna so much, and we worked together on Captain Miller. While we were working on #CaptainMiller, Dhanush anna told me, I’m going to direct my next film, and I want you to be a part of it in a lead role with me.
– I’m sure your…— Movie Tamil (@_MovieTamil) September 16, 2026
Also Read… 20 இயர்ஸ் ஆஃப் லவ் அண்ட் வார்… திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா – ஜோதிகா தம்பதி!