எல்லாரும் அவர பாத்து பயப்புடுவாங்க… ஆனா அவரு எதுக்கும் பயப்படமாட்டாரு – வெளியானது விஜய் சேதுபதியின் வேர்ல்ட் ஆஃப் பத்தா வீடியோ
World of Baththa video out now | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பத்தா. இந்தப் படத்தில் இருந்து வோர்ல்ட் ஆஃப் பத்தா வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பெயரிடப்படாத கதாப்பாத்திங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் தனது கடின உழைப்பின் காரணமாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் பலப் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது அடுத்தடுத்து 6 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் இரண்டு படங்களை தவிர்த்து மற்ற 4 படங்களிலும் அவர் நாயகனாகவும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




வெளியானது விஜய் சேதுபதியின் வேர்ல்ட் ஆஃப் பத்தா வீடியோ:
அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தற்போது பத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகை லிஜோ மோல் ஜோஷ் உட்பட பலர் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ள நிலையில் இயக்குநர் அட்லி தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். இந்த நிலையில் படத்தில் இருந்து இன்று வோர்ல்ட் ஆஃப் பத்தா என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 01-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெளியானது விஜய் சேதுபதியின் வேர்ல்ட் ஆஃப் பத்தா வீடியோ:
Experience the power-packed #WorldOfBaththa now 🔥
Watch on Youtube ▶️: https://t.co/lq9m0LsE6m
Written & Directed by #BalajiTharaneetharan
A @SaiAbhyankkar musical#BaththaFromOct1Makkal Selvan @VijaySethuOffl @jose_lijomol @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl… pic.twitter.com/1AyPWzdhTt
— Think Music (@thinkmusicindia) September 16, 2026
Also Read… ரியோ ராஜின் மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது – வைரலாகும் வீடியோ