அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்… மண்டாட்டி படத்தினை பாராட்டிய ரஜினிகாந்த் – நெகிழ்ச்சியில் சூரி
Super Star Rajinikanth Praised Mandaadi Movie | நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அந்தப் படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் சூரியின் மண்டாட்டி ஆகியப் படங்கள் கோலிவுட் சினிமாவில் வெளியானது. இந்த இரண்டு படங்களில் கார்த்தியின் சர்தார் 2 படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மாறாக அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது ஏமாற்றம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான மண்டாட்டி படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே அவருக்கு ஏறுமுகமாகவே உள்ளது. அதன்படி அவரது நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள மண்டாட்டி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து நடிகர் சூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்:
அதன்படி நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எங்கள் மண்டாட்டியைப் பார்த்து மிகவும் ரசித்தார். அவர் மனதார அழைத்துப் பேசியது எனக்கும் எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. தொலைபேசியின் மறுமுனையில் அவர் குரலைக் கேட்ட அந்த விலைமதிப்பற்ற தருணத்தை இந்தப் புகைப்படம் படம் பிடித்துள்ளது. அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்!
Also Read… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூரி? அடுத்தப் படத்திற்கு இத்தனை கோடிகளா – வைரலாகும் தகவல்
நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏@rajinikanth sir 🙏🙏🙏
அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த… pic.twitter.com/RYNPUzFqUj
— Actor Soori (@sooriofficial) September 14, 2026
Also Read… அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்