பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த நடிகை ஆனந்தி – போட்டியளர்களிடையே சலசலப்பு
Bigg Boss Tamil Season 10 | இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல ட்விஸ்டுகள் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் ஒரு வைல்கார்ட் போட்டியாளர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து பல டாஸ்குகளும் நிகழ்ச்சி குழுவால் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான டாஸ்குகள் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தது. அதிக அளவில் அப்போது டாஸ்குகள் வழங்கப்பட்டது. போக போக சில சீசன்களில் டாஸ்குகளின் எண்ணிக்கையை குறைத்து போட்டியாளர்கள் சும்மாவே இருக்க வைத்தனர். அப்படி இருக்கும் போது அவர்களுக்குள்ளே பேசிப் பேசி அது பெரிய அளவில் பூகம்பமாக சண்டையாக வெடிப்பது வழக்கமாக இருந்தது. இது ஒரு தரப்பு பார்வையாளர்களுக்கு பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் பலருக்கு எரிச்சல் மூட்டும் விதமாகவே இருந்தது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல ட்விஸ்ட் மற்றும் சர்ப்ரஸைகள் போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கும் உள்ளது. அதன்படி கடந்த வாரம் ப்ளாக் பாண்டிக்காக பிக்பாஸ் வீட்டில் ஒரு வைல்கார்ட் என்ட்ரி இருந்த நிலையில் இரண்டாவது வாரமே தற்போது இன்னொரு வைல்கார்ட் என்ட்ரி வந்துள்ளது. முந்தைய சீசன்களில் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி பாதி நாட்கள் சென்ற பிறகே வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வருவதும் குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்த நடிகை ஆனந்தி:
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 8-வது நாளான இன்று நடிகை ஆனந்தி அஜய் இரண்டாவது வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்துள்ளார். இவர் உள்ளே வரும் போது பாடல்கள் ஒளிக்கபப்ட்டு மற்ற போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்ற நிலையில் போட்டியாளர் லக்ஷ்மி பிரியாவிடம் ஆனந்தி பேசியது அவரை எர்ச்சல் அடைய செய்துள்ளது. அதனால் லக்ஷ்மி பிரியா ஆனந்தியை லூசு என்று திட்டுவதும் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day8 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/oNuQRuOnlQ
— Vijay Television (@vijaytelevision) September 14, 2026
Also Read… தலைவர் எப்படி இருக்க வேண்டும்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது