AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலைவர் எப்படி இருக்க வேண்டும்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பேசும் போது தலைமைப் பண்பு குறித்து பேசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வைரலாகி வருகின்றது.

தலைவர் எப்படி இருக்க வேண்டும்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Sep 2026 10:50 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. இதுவரை மொத்தம் 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு நடிகர் கமல் ஹாசன் கடந்த 8-வது சீசனின் இருந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். தொடர்ந்து எத்தனை தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு மாறினாலும் பார்வையாளர்களின் விமர்சனம் என்பதை அனைவருக்கும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் நேற்று வாரம் முழுவதும் நடந்த கேப்டன்சி குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர் மற்றும் கேப்டனாக இருந்த சாதிகாவிடம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது:

அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டெமோகிரசி அறை என்று ஒன்றை உருவாக்கி போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடினர். இதில் ஆளும் அணி எதிர் அணி என்று தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்பு போலவே அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார். அது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விசயத்தை பேசினாரா அல்லது தமிழக அரசியல் குறித்து பேசினாரா என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றது.

முன்னதாக நடிகர் கமல் ஹாசன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அரசியல் நிகழ்வுகளை போட்டியாளர்களின் செயல்கள் குறித்து பேசுவது போல பேசுவார். அதே பாணியில் தற்போது விஜய் சேதுபதி பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… எதிர்பாராததை எதிர்பாருங்கள்… தொடர்ந்து ட்விஸ்ட்களை தரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ

Follow Us