பிக்பாஸில் கேப்டனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து கண்டெண்டுகள் பஞ்சமில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றது. இதில் போட்டியாளர் முனியம்மாவின் செயல் மற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே முகசுழிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் செல்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ஏதேனும் சண்டைகள் வெடித்துக்கொண்டே இருக்கின்றது. பிக்பாஸ் எந்த ஒரு டாஸ்கை வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அறிவித்தாலும் அந்த டாஸ்க் அமைதியாக சொன்னடி நடந்ததே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட நிலையில் நட்டிகர் ப்ளாக் பாண்டி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் தற்போது வீட்டில் 18 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வாரம் கேப்டனாக சாதிகா தேர்வான நிலையில் அவரை சுற்றியே பல விசயங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக போட்டியாளர் பாண்டியம்மா கேப்டன் என்ன சொன்னாலும் அதற்கு நேர் எதிராகதான் செய்வேன் என்று தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறார். மேலும் அது பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டும் விதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் கேப்டனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட முனியம்மா:
இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பிக்பாஸில் கேப்டனிடம் போட்டியாளர் முனியம்மா அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதற்காக மற்ற போட்டியாளர்கள் முனியம்மாவிடம் கேள்வி கேட்டபோதும் அதற்கு அவர் திமிராக பதிலளிக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்க என்ன காரணம்? இளையராஜா ஓபன் டாக்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day4 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/I54I11Fxvb
— Vijay Television (@vijaytelevision) September 10, 2026
Also Read… சூடு பிடிக்கும் பிக்பாஸ்… கேப்டனுக்கு எதிராக திரும்பும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ



