மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டது ஓம் படக்குழு
OM – Tamil Teaser 2 | நடிகர் மம்முட்டி தற்போது தமிழ் சினிமாவில் தனுஷ் உடன் இணைந்து ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மம்முட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அதனை சிறப்பிக்கும் விதமாக ஓம் படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. தொடர்ந்து உச்ச நடிகராக இருக்கும் போதே நாயகனாக மட்டும் இன்றி வில்லன், காமெடியன், குணசித்திர வேடம் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் கதை சிறப்பாக இருந்தால் நடித்து வருகிறார் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அவ்வபோது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் மம்முட்டி இறுதியாக பேரன்பு படத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடித்து வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
அதன்படி நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் நடித்து வரும் இந்த ஓம் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.




மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டது ஓம் படக்குழு:
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி இன்று 07-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026–ம் ஆண்டு தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக ஓம் படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இன்று மம்முக்காவின் மேஜிக் என்று தெரிவித்ததுடன் ஓம் படத்தில் இருந்து ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Soori: என்னுடைய படங்களிலே பெஸ்ட் மண்டாடி – சூரி ஓபன் டாக்!
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s time to introduce you to, Burma Karthikeyan🔥
Siya Entry from #OM ▶️ https://t.co/CEAgFT23LQ
Special birthday wishes to the one and only @mammukka ❤️
A @SaiAbhyankkar Musical. @dhanushkraja @Rajkumar_KP @RTakeStudios @wunderbarfilms @Sai_Pallavi92 #NaseeruddinShah… pic.twitter.com/LIPLaMl6RR
— Wunderbar Films (@wunderbarfilms) September 7, 2026
Also Read… ஒரே நாளில் 4 மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்… வைரலாகும் வீடியோ