AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் நடிச்சா நடிகைகளில்… அந்த நடிகையுடனான ஜோடி என் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும் – நிவின் பாலி!

Nivin Pauly wifes favorite actress: மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் நிவின் பாலி. இவரின் நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் படங்கள் வெளியாகிறது. முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிவின், தன்னுடன் நடித்த நடிகைகளில், தனது மனைவிக்கு பிடித்த நடிகை யார் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நான் நடிச்சா நடிகைகளில்… அந்த நடிகையுடனான ஜோடி என் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும் – நிவின் பாலி!
நிவின் பாலிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Sep 2026 08:31 AM IST

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியில் மிகவும் பிரபலமான நாயகனாக ரசிக்கப்படுபவர் நிவின் பாலி (Nivin pauly). இவரின் நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகியிருந்தாலும், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுவிடும். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வரிசையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). இப்படமானது 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், சிறப்பான வரவேற்ப்பு[ஐ பெற்றிருந்தது. இதில் நிவின் பாலியுடன் மமிதா பைஜூ (Mamitha baiju) ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பின் ருக்மிணி வசந்துக்கு ஜோடியாகவும் புதிய திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி நடித்துவருகிறார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிவின் பாலி, தான் ஜோடியாக நடித்த நடிகைகளில், தனது மனைவிக்கு பிடித்த நடிகை யார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

தன்னுடன் நடித்த நடிகைகளில் தனது மனைவிக்கு பிடித்த நடிகை பற்றி நிவின் பாலி பேச்சு:

அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் நிவின் பாலியிடம், நீங்கள் நடித்த நடிகைகளில், உங்களின் மனைவிக்கு பிடித்த நடிகை யார், எந்த திரைப்படம் என கேள்வி கேட்டிருந்தார். அந்த கேள்வியின் ஆப்ஷனாக திரிஷா, சாய் பல்லவி, நஸ்ரியா போன்ற நடிகைகளும் இருந்தனர். உடனே பதிலளித்த, நிவின் பாலி, எனது மனைவிக்கு சாய் பல்லவி ரொம்ப பிடிக்கும்.என்னுடன் சாய் பல்லவி நடித்த பிரேமம் படமும் அவருக்கு பிடிக்கும் என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஹீரோ பிளாப்.. கார்த்தி சார் மட்டும்தான் எனக்கு கால் பண்ணாரு – பி.எஸ்.மித்ரன் பேச்சு!

நடிகர் நிவின் பாலியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷுட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor)

நடிகர் நிவின் இறுதியாக பெத்லகேம் குடும்ப யூனிட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது உலகமெங்கும் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்திற்கு பின் இவரின் நடிப்பில் பென்ஸ், ராமின் ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்கள் உள்ளது. இதன் பிறகு மலையாள இயக்குனர் நஷீத் ஃபேமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நாயகியக நடிக்கிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us