Kayadu Lohar: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
Kayadu Lohar Shares About Rajinikanth: தென்னிந்திய மொழிகளில் தற்போது லீட் இளம் நாயகியாக இருந்துவருபவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படம் வெளியாக காத்திருக்க,கும் நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்த தருணம் குறித்து பேசியுள்ளார்.
இளம் கதாநாயகியாக தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிவருபவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் தமிழில் தொடர்ந்து பிரபல நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). நடிகர் டோவினோ தாமஸ் (Tovino Thomas) இதில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கயாடு லோஹரின் நடிப்பில் வெளியாக தயாராகியுள்ள புது படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இந்த படமானது காட்டேரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், 20276ம் செப்டம்பர் 04ம் தேதியில் வெளியாகிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் விளம்பர பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்துடன் விமானத்தில் ஏற்பட்ட சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மறக்க முடியாத பயணம்… கிடாரி படம் குறித்து நெகிழ்ந்த சசிகுமார்
ரஜினிகாந்த் குறித்து நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை கயாடு லோஹர்:
அந்த பேட்டியில் கயாடு லோஹர், “விமானத்தில் ரஜினிகாந்த் சார் அங்கே உட்கார்ந்திருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் அவரைப் பார்க்கக்கூட இல்லை. அவர் தனது ஏர்பாட்ஸை இருக்கையில் வைத்தார். நான், “சார், உங்கள் ஏர்பாட்ஸை எடுக்க முடியுமா?” என்று கேட்டேன், அவரும் அதை எடுத்தார். பின்னர் தான் எனக்குத் தெரிந்தது, தனியுரிமைக்காக யாரும் அவருக்கு அருகில் உட்கார மாட்டார்கள் என்பதால் அவர் அந்த இருக்கையையும் முன்பதிவு செய்திருந்தார் என்று. ஒரு கணம், நான் திரும்பியபோது, அங்கே ரஜினிகாந்த் சார் இருந்தார்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்
நான் மிகவும் பதற்றமாகவும், நடுக்கமாகவும் இருந்தேன். ‘நான் என்ன செய்துவிட்டேன்’ என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவருடைய தனிப்பட்ட இடத்தில் நான் தலையிட விரும்பவில்லை. நான் அமைதியாக இருந்தேன். விமானப் பயணம் முழுவதும் தூங்குவது போல் நடித்தேன். பின்னர், விமானம் தரையிறங்கியதும், நான் அவருடன் பேச விரும்பினேன். நான் அஸ்வத்தை அழைத்து, அவரிடம் பேசலாமா என்று கேட்டேன். சார் மிகவும் இனிமையாகப் பேசினார். நான் ‘டிராகன்’ படத்தின் கதாநாயகி என்று சொன்னேன். அவர், நான் வித்தியாசமாகத் தெரிவதாகவும், மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறினார் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.



