AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

90% சதவிகித முதுகு தண்டுவட பாதிப்பு… கடின உழைப்பால் சென்னை ஐஐடியில் இடம் பிடித்த மாணவர்

Inspiring Teen Secures IIT Seat : பிறவியிலேயே 90 சதவிகித முதுகுத்தண்டு தசை பாதிப்பு இருக்கும் சந்தோஷ், ஐஐடி மெட்ராஸின் 4 ஆண்டு டேட்டா சயின்ஸ் படிக்க வாய்ப்பை பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவர், இரண்டாவது முயற்சியில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

90% சதவிகித முதுகு தண்டுவட பாதிப்பு… கடின உழைப்பால் சென்னை ஐஐடியில் இடம் பிடித்த மாணவர்
ஜே.சந்தோஷ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Sep 2026 15:32 PM IST

சென்னை, செப்டம்பர் 3 : 17 வயதிலேயே கடுமையான உடல் பாதிப்புகளை தாண்டி சென்னை ஐஐடி இடம் பிடித்து ஜே.சந்தோஷ் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். பிறவியிலேயே 90 சதவிகித முதுகுத்தண்டு தசை பாதிப்பு இருக்கும் சந்தோஷ், ஐஐடி மெட்ராஸின் 4 ஆண்டு டேட்டா சயின்ஸ் படிக்க வாய்ப்பை பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவர், இரண்டாவது முயற்சியில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

கடின உழைப்பால் சென்னை ஐஐடியில் இடம் பிடித்த மாணவர்

வீட்டில் இருந்தபடியே படிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்துள்ள சந்தோஷ், எதிர்காலத்தில் ஐடி துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார். பிறவியிலேயே 90% முதுகுத்தண்டு தசை பாதிப்பு மற்றும் செரிப்ரல் பால்சி பாதிப்புடன் இருக்கும் 17 வயது ஜே.சந்தோஷ் என்ற மாணவர், சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் என்ற படிப்பில் படிக்க வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதையும் படிக்க : புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!

ஐஐடியின் பதிவு

 

கடந்த 2025 ஆம் ஆண்டு தனது பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடிக்கு கல்விச் சுற்றுலா சென்றபோது, அவரால் மட்டும் செல்ல முடியவில்லை. ஆனால், தற்போது அதே சென்னை ஐஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான சந்தோஷ், முதல் முயற்சியில் தகுதித் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3வது வாரத்தில் தனது படிப்பை தொடங்க உள்ளார்.

இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதி வெற்றி.. மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்..

வீட்டில் இருந்தபடியே படிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்ய விரும்பியதாகவும், டிஎன் வாலன்டியர்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு மூலம் ஐஐடி மெட்ராஸ் படிப்பு குறித்து தெரிந்துகொண்டதாகவும் சந்தோஷ் தெரிவித்துள்ளார். சந்தோஷின் படிப்புக்கு ஆரம்ப கட்டத்தில் நேரடி பயிற்சி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளதாக டிஎன் வாலண்டியர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஹரி கிருஷ்ணன் கூறுகையில், சந்தோஷுக்கு நேரடி பயிற்சி வழங்குவதுடன், ஏஐ குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளோம். மேலும், அவரது முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தையும் நாங்களே ஏற்கிறோம் என்றார்.

Follow Us