அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு அரசு பொறுப்பு.. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் தலைவராக நியமனம்..
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சிவராஜ் ராமநாதன், கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தற்போது தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3, 2026: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சிவராஜ் ராமநாதன், கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புகள் தொழில்துறை ஆணையரும், தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநருமான எல். நிர்மல் ராஜுவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
சிங்கை ராமசந்திரனுக்கு அரசு பதவி:
இந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தற்போது தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமசந்திரன்:
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி விவகாரங்கள் தொடர்ந்து நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறி அக்கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து சிங்கை ராமச்சந்திரன் விலகினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்த அவர், அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாணவர் அணிச் செயலாளராகப் பணியாற்றிய சிங்கை ராமச்சந்திரன், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு.. இன்று காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தபோதே அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிங்கை ராமச்சந்திரனின் தந்தையான சிங்கை கோவிந்தராஜ், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.