AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா பட பாடலுக்கு கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த கயாடு லோஹர்

Kayadu Lohar cute performance to the song Munbe Vaa | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் சூர்யாவின் பாடல் ஒன்றுக்கு கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

சூர்யா பட பாடலுக்கு கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த கயாடு லோஹர்
கயாடு லோஹர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 17:20 PM IST

கன்னட சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை கயாடு லோஹர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் நடிகை கயாடு லோஹர் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ட்ராகன் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை கயாடு லோஹரின் நடிப்பில் இதுவரை தென்னிந்திய சினிமாவில் வெளியான பத்தோன்பாதம் நோட்டாண்டு, அல்லூரி, ஐ பிரேம் யூ, ஒரு ஜாதி ஜாதகம், ஃபங்கி, பள்ளிச்சட்டம்பி ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மேலும் இறுதியாக நடிகை கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் இதயம் முரளி என்ற படத்தில் நடித்து இருந்தார். இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிகை கயாடு லோஹர் நடித்து இருந்தார். அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை கயாடு லோஹர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

சூர்யா பட பாடலுக்கு கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த கயாடு லோஹர்:

அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் நடிகை கயாடு லோஹர் தற்போது இம்மார்டல், மஞ்சனத்தி மற்றும் சூர்யா 48 படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கயாடு லோஹர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற சில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து முன்பே வா என் அன்பே வா என்ற பாடலுக்கு கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் சூர்யா உடன் அவர் நடிக்க உள்ள படத்திற்கு காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read…  பட்டாம்பூச்சி பாடலுக்கு அழகாக டான்ஸ் ஆடிய மமிதா பைஜூ – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் கயாடு லோஹர் வீடியோ:

Also Read… கலகல காமெடியில் சந்தீப் கிஷன் நடிப்பில் இந்த சூப்பர் சுப்பு சீரிஸை மிஸ் செய்யாதீர்கள்

Follow Us