துப்பாக்கியில் விஜய்யின் தங்கையாக நடித்தவரா இது.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
Thuppakki Movie Actress : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தளபதி விஜய்யின் கூட்டணியில் வெளியான படம்தான் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யின் இரண்டாவது தங்கையாக நடித்தவர்தான் சஞ்சனா. இப்போது அவர் எப்படி இருக்காங்க தெரியுமா? அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss). இவரின் இயக்கத்தில் இதுவரை தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இந்தியில் சல்மான் கான் முதல் அமீர் கான் வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நாயகனாக நடித்திருந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தளபதி விஜய்யின் கூட்டணியில் முதல் முதலில் வெளியான படம்தான் துப்பாக்கி (Thuppakki).
கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இப்படத்தில், முதல்வர் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்திருந்தனர். இதில் தளபதி விஜய்யின் 2வது தாங்கியாக நடித்திருந்தனர் சஞ்சனா. இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பாருங்க.




இதையும் படிங்க: சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன? வைரலாகும் புது தகவல்
நடிகை சஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
சஞ்சனா துப்பாக்கி படத்தின் மூலம் பிரபலமானவர். தற்போது பெரிதாக எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சஞ்சனா நடித்திருந்த திரைப்படங்கள்:
நடிகை சஞ்சனா தமிழில் துப்பாக்கி படத்தில், தளபதி விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்த நிலையில், அதை தொடர்ந்து படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தங்கையாக நடித்துவந்தார். இவர் நடிப்பில் என்றென்றும் புன்னகை, வாலு, என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் ப்ரோ என பல படங்கள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஹீரோ கதையில் சூப்பர் ஹிட் அடித்த மாவீரன் படம் மூன்று ஆண்டுகளைக் கடந்தது
இவர் இறுதியாக மிஷ்மாட்ச் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நடித்திருந்த இந்த வெப் தொடரானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இதையடுத்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை என கூறலாம். தற்போது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.