AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Shruti Haasan: சொந்த உழைப்பில் புதிய வீட்டை வாங்கிய ஸ்ருதிஹாசன் – வைரலாகும் போட்டோஸ்!

Shruti Haasan New House: உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். அவரின் புது வீட்டின் புதுமனை புகுவிழா தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Shruti Haasan: சொந்த உழைப்பில் புதிய வீட்டை வாங்கிய ஸ்ருதிஹாசன் – வைரலாகும் போட்டோஸ்!
ஸ்ருதி ஹாசன் புதிய வீடுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2026 16:09 PM IST

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்திவருபவர் நடிகை ஸ்ருதிஹாசன் (Shruti Haasan). இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் கூலி (Coolie). இதில் ரஜினிகாந்த் (Rajinikanth) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நடிகை ஸ்ருதிஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தமிழில் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் கூலி படத்திற்கு முன்னே விஜய் சேதுபதியின் நடிப்பிலும், மிஷ்கினின் இயக்கத்திலும் படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அந்த படம்தான் ட்ரெயின் (Train).

இந்த இப்படமானது அதிரடி திரில்ல பாணியில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த விதத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். சென்னையில் பிரம்மாண்டமான வீடு வாங்கியுள்ள நிலையில், அதற்கான புதுமனை புகுவிழாவை இன்று நடாத்தியுள்ளாராம். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன? வைரலாகும் புது தகவல்

ஸ்ருதிஹாசனின் புதிய இல்லத்தின் புதுமனை புகுவிழா குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

ஸ்ருதிஹாசன் கைவசம் உள்ள படங்கள் :

இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக கூலி படம் வெளியானது. இப்படத்திற்கு பின், சியான் விக்ரமின் புது படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது. அதை அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமார் இயக்கவிருந்த நிலையில், தற்போது அந்தப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விக்யம் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில், சியான்63 படத்தில் இணைந்துவிட்டார். இதன் பிறகு அவர், தெலுங்கில் புது படம் ஒன்றில் நடிக்கிறாராம். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவர்தான்!

ஆனால் இயக்குநர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆரை வைத்து டிராகன் என்ற படத்தை இயக்கிவருகிறார். ஆதனால் சலார் 2 படம் உருவாக்க எப்படியும் 2 ஆண்டுகள் ஆகும். தற்போது தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள “ஆகாசம்லோ ஒக்க தாரா” என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது சிறப்பாக உருவாகிவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாக காத்திருக்கிறது.

Follow Us