AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: சமந்தாவின் ரூ 100 கோடி சம்பவம்.. மா இன்டி பங்காரம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியமா? – வெளியான அறிவிப்பு இதோ

Maa Inti Bangaram OTT release: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் மா இன்டி பங்காரம். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ 100 கோடிக்கும் மேல் வாசுகித்து சாதனை படைத்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samantha: சமந்தாவின் ரூ 100 கோடி சம்பவம்.. மா இன்டி பங்காரம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியமா? – வெளியான அறிவிப்பு இதோ
மா இன்டி பங்காரம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2026 16:43 PM IST

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் (Samanatha Ruth Prabhu) நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகியிருந்த படம்தான் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). தமிழில் இப்படமானது எங்கள் தங்கம் (Engal Thangam) என வெளியாகியிருந்தது. தெலுங்கு பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandhini Reddy) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை சமந்தா, அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சமந்தாவுடன் நடிகை கௌதமியும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பெண்ணியம் சார்ந்த ஆக்ஷன் மற்றும் அதிரடி குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம், 2026ம் ஆண்டு ஜூன் 19 தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் கிட்டத்தட்ட 23 நாட்களிலே உலகமெங்கும் ரூ 100 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இப்படத்தின் வசூல் குறித்து சமந்தா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அண்மையில் இதன் வெற்றி விழாவையும் படக்குழு கொண்டாடியிருந்தது. தற்போது இத்துடன் டபுள் ட்ரீட்டாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளம் ராஜனாக கென் கருணாஸ்.. தொடங்கியது ராஜன் வகையறா பட ஷூட்டிங்?

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது:

சமந்தா இந்த படத்தில் முற்றிலும் ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சமந்தா ஸ்வர்ணா மற்றும் ஜான்சி போன்ற வேடங்களில் நடித்திருந்தார். மேலும் குல்ஷன் தேவைய்யா இதில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருட்டுந்தார். மேலும் தமிழ் நடிகை கௌதமியும் இணைந்து நடித்திருந்த நிலையில், படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: கபாலி படத்தில் எனக்காக பேசிய ரஜினிகாந்த் சார் – சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகுவதாக கூறப்படுகிறது.

மா இன்டி பங்காரம் பட ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

சமந்தா மா இன்டி பங்காராம் படத்திற்கு பின், எந்த படத்தில் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர், கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சி ஒன்றில், மீண்டும் தான் கொஞ்ச காலத்திற்கு சினிமாவிலிருந்து விலகியிருக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், தனது குழந்தை பிறப்பிற்கு பின்னரே, சமந்தா சினிமாவில் இனி நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us