கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
Director AR Murugadoss | தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் ரசிகர்களிடியே வரவேற்பைப் பெற்ற கத்தி படம் குறித்து இயக்குநர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தீனா. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நாயகன்களை வைத்து படங்களை இயக்க தொடங்கினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஏ.ஆர்.முருகதாஸ் அவ்வபோது இந்தி மொழிப் படங்களையும் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இறுதியாக இயக்கியது மதராஸி என்ற படத்தை.
நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்?
கத்தி படத்தில் பாலம் பாடலைப் படமாக்க நாங்கள் மிகுந்த முயற்சி எடுத்தோம். ஹைதராபாத்தில் உள்ள ஒரு பாலத்தில் அது படமாக்கப்பட்டது. அப்பகுதி பதற்றமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ள இடமாக இருந்தது. படப்பிடிப்புக்கு முன் உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் தேவையான அனைத்து அனுமதிகளையும் நாங்கள் பெற்றோம். உண்மையில், ‘கத்தி’ (Kaththi) திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு சற்று முன்பு இந்தப் பாடல் இடம்பெறுவதாகவே திட்டமிடப்பட்டிருந்தது.
பாடலுக்குப் பிறகு கிளைமாக்ஸ் காட்சிக்கு மாறுவதே எங்கள் ஆரம்பகட்டத் திட்டமாக இருந்தது. ஆனால், முழுமையான திரைப்படத்தை வரிசைப்படி பார்த்தபோது, அந்தப் பாடல் கிளைமாக்ஸ் காட்சியின் உணர்வுபூர்வமான ஓட்டத்தைத் தடுப்பதாக எங்களுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் பார்வையாளர்கள் கதையோடு முழுமையாக ஒன்றிப்போயிருந்ததால், அங்கு ஒரு பாடல் தேவைப்படாது என்று நாங்கள் கருதினோம்.
திரைப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த பிறகு, அனிருத் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும், பாடல் மிகச் சிறப்பாக இருந்தாலும் அது படத்தின் கதை ஓட்டத்தைப் பாதிப்பதாகக் கூறினர். எனவே, அதைத் திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டு, படம் வெளியான பிறகு தனியாக வெளியிடலாம் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். அதனால்தான் இறுதிப் பதிப்பிலிருந்து அதை நீக்க நாங்கள் முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளர்.
Also Read… சந்தானத்தின் லவ் பைட் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: Why wasn’t the song “#Paalam” used in #Kaththi….?#ARMurugadoss:
We put a lot of effort into shooting that song. It was filmed on a bridge in Hyderabad, which was a very sensitive area with the potential for unrest. We secured all the necessary permissions with the… pic.twitter.com/KPPrv8SDS5
— Movie Tamil (@_MovieTamil) July 11, 2026
Also Read… Jana Nayagan: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!