இந்த போட்டோவில் கியூட்டாக சிறுமி யார் தெரியுமா இவர் நடிகர் விஷாலின் நெருங்கிய தோழி.. அட இந்த நடிகையா?
Tamil Actress Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது. சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்துவரும் நடிகை, இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?. விவரமாக பார்க்கலாம் .
சோஷியல் மீடியாக்களில் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் (Cinema celebrities) அடையாளம் தெரியாத புகைப்படங்கள் மற்றும் சிறுவயது போட்டோக்கள் வைரலாகிவரும். அதுபோல மேலே இருக்கும் போட்டோவில் சிவப்பு நிற உடையில் கியூட்டாக அமர்ந்திருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?. இந்த சிறுமி எந்தவித சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2026ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியக அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சிவ நாகேஸ்வர ராவ் (Shiva Nageswara Rao) இயக்கியிருந்தார். பின் தமிழில் 2007ம் ஆண்டில் இயக்குநர் ராமின் (Director Ram) இயக்கத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த வேடம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் நொறுக்கியது என கூறலாம். அவ்வளவு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் நுழைந்தார்.
இப்படத்திற்கு பின் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். விஷால் (Vishal) முதல் ஆர்யா (Arya) போன்ற பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் விஷாலின் நெருங்கிய பெண் தோழியும் கூட. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து நாயகியாக நடித்து அசத்தி வருபவர் இவர். தற்போது விஷால் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அட இது வேறுயாருமில்லை, நடிகை அஞ்சலி தான் (Actress Anjali).




இதையும் படிங்க: நூறு சாமி படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
விஷாலுடனான நட்பு குறித்து நடிகை அஞ்சலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Time flies. Years pass. But some memories and some special people remain timeless.
More than a decade later, we’re still the same pranksters at heart. Here’s to a friendship that nothing can ever change.
Loads of love. ❤️@VishalKOfficial #Magudam #Makutam pic.twitter.com/GACXewMftm— Anjali (@yoursanjali) June 30, 2026
நடிகை அஞ்சலியின் சினிமா பயணம் :
நடிகை அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் இயக்குநர் சிவ நாகேஸ்வர ராவின் இயக்கத்தில் வெளியான போட்டோ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். திரில்லர் பாணியில் வெளியான இப்படம் அவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்திற்கு பிறகும் தெலுங்கில் பிரேமலேகா ராசா என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த வரிசையில் தமிழில் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது கற்றது தமிழ். இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007ம் ஆண்டில் வெளியான இதில், நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!
இப்படத்தில் அவர் நடித்திருந்த வேடம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. இப்படத்திற்கு பின் தமிழில் அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என சிறப்பு படங்களில் நடித்துவந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். தற்போது நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகியுள்ள மகுடம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2026ம் ஆண்டு ஜூலை இறுதியில் வெளியாகிறது.