AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூறு சாமி படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Nooru Saami Movie OTT Rights And Satellite Rights Update Here | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நூறு சாமி படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.

நூறு சாமி படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
நூறு சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 18:55 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நூறு சாமி. இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்வாசுகா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், சக்தி, கருணாஸ், பாலாஜி சக்திவேல், காவ்யா அனில், முனிஷ்காந்த், அருள்தாஸ், பதின் குமார், பகவதி பெருமாள், ஜென்சன் திவாகர், தாமரை, வினோதினி வைத்தியநாதன், முத்துஅழகி, கோடாங்கி வடிவேலு, சாரதா, அபிநயா, சபிதா ராய், மூர்த்தி மற்றும் சுப்ரமணியம் சிவா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி கார்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர் ஃபாதிமா விஜய் ஆண்டனி தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நூறு சாமி பட சாட்டிலைட், ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

மிகவும் வித்யாசமான கதையில் தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kasthuri Raja: தனுஷ் அரசியலுக்கு வருவாரா? தனது கருத்தை சொன்ன கஸ்தூரி ராஜா!

நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vishnu Vishal: கட்டா குஸ்தி 2 வெற்றி.. விஷ்ணு விஷாலுக்கு பிக் கிஃப்ட் கொடுத்த தயாரிப்பாளர்!

Follow Us