AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

Vijay TVs Ayyanar Thunai: தமிழில் பிரபலமிக்க சீரியல்களில் ஒன்றாக இருந்துவருவதுதான் அய்யனார் துணை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் தற்போது ஹனி மூன் ட்ரிப் தொடர்பான எபிசோடுகள் வெளியாகிவருகிறது. இன் ஷூட்டிங் புகைப்படத்தை இந்த சீரியல் நடிகர் பர்வேஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
அய்யனார் துணை தொடர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 09 Jul 2026 21:27 PM IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் சிறப்பான சீரியல்களில் ஒன்றாக இருந்துவருவது அய்யனார் துணை (Ayyanar Thunai). தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) வெளியாகிவரும் இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 (Top 5 TRP Rating) இடங்களில் ஒன்றாக உள்ளது. சின்னத்திரை சீரியல்களில் சன் டிவி (Sun Tv), விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் (zee Tamil) போன்ற சேனல்கள் பிரபலமானவை என்ற நிலையில், அதில் ஒளிபரப்பாகிவரும் அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியலில் ஒன்றுதான் அய்யனார் துணை. இந்த சீரியலில் நடிகர் அரவிந்த் சேஜூ (Aravinth Seiju), பர்வேஸ், மதுமிதா (Madhumitha), முனாப் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த சீரியலானது தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. சோழன் மற்றும் நிலா சோழன் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஹனி மூனுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

இது தொடர்பான சீரியல் எபிசோடுகள் ஒளிபரப்பாகிவரும் நிலையில், தற்போது அதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்றுவருகிறது. அங்கு நடைபெறும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சீரியல் நடிகர் பர்வேஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!

சீரியல் நடிகர் பர்வேஸ் பகிர்ந்து அய்யனார் துணை சீரியல் ஷூட்டிங் புகைப்பட பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Parvez (@parvez_here._)

விஜய் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நம்பர் 1 சீரியலாக இருப்பதுதான் அய்யனார் துணை. இந்த சீரியல் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வெளியாக தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. தற்போதுவரையிலும் இந்த சீரியல் விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருக்கிறது.

இதையும் படிங்க: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!

தற்போது இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்றுவரும் நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நடிகர்கள் பகிர்ந்துவருகிறார்கள். இது இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அய்யனார் துணை சீரியலின் டிஆர்பி ரேட்டிங்:

இந்த சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1-ஆக இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் சீரியல்களில் எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா?. இந்த சீரியலானது ஒட்டுமொத்த தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 5வது இடத்தில் உள்ளது. முதல் 4 இடங்களை சன் டிவி தொலைக்காட்சி தொடர்கள் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us