என்ன அடைச்சி வெச்சி கொடும படுத்துறாங்க… பிக் பாஸ் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
Watermelon Star Diwakar: இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம், தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர்மெலான் திவாகர். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த விதத்தில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் (Watermelon Star Diwakar). இவர் கஜினி (Gajini)படத்தில் சூர்யா வாட்டர்மெலான் சாப்பிடுவதுபோலவே, நகைச்சுவையாக செய்து தனது இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். அதன் பிறகே இவருக்கு வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் என பெயர் வந்தது. இவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவின் மூலம் பிமிகவும் பிரபலமானார். நகைச்சுவையான நடிப்பின் மூலமாகவும், தனது பேசினாலும் பிரபலமானவர். இவர் உண்மையிலே ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் (Physiotherapist) என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2025 – 2026ம் ஆண்டில் வெளியான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த போட்டியின் மூலம் மேலும் இணையத்தில் பிரபலமானார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் உள்ளே பல விஷயங்கள் இவர் தவறாக செய்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. அந்த விதத்தில், சமீபத்தில் இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் அவரை அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக அவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: நானி – வெங்கி அட்லூரி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ:
View this post on Instagram
அந்த வீடியோவில் அவர், தான் இன்டெர்வியூ ஒன்றுக்காக அந்த சேனலுக்கு சென்றதாகவும், அங்கு அவரை ஒரு அறையில் அடைத்துவைத்து அவர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் துறையிடம் தான் புகார் அளித்தும் எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்
மாகாபா-வுடன் பிரச்சனை செய்த திவாகர்:
சில மாதங்களுக்கு முன் திவாகர், தன்னை தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் அடித்ததாகவும், அவருடன் சேர்ந்து குக் வித் கோமாளி புகழ் போன்ற பிரபலங்களும் தன்னை தாக்கியதாக புகார் அளித்திருந்தார். மதுபோதையில் மாகாபா தன்னை தாக்கியதாக பகிரங்கமாக கூறினார். இதற்கு விளக்கம் கொடுத்து மாகாபா தரப்பும் பேட்டி கொடுத்திருந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிந்த சில மாதத்திலே புது பிரச்சனையில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் சிக்கியதாக வீடியோ ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.