AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்

14 Years Of Naan EE Movie | தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ் சினிமாவில் ரீ மேக் செய்யப்பட்ட நான் நீ படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்
நான் ஈImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 16:29 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தெலுங்கு மொழியில் ஈகா என்ற பெயரில் உருவான படத்தை தமிழ் சினிமாவில் நான் ஈ என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர். இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் நானி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆதித்யா, சந்தானம், சத்ரபதி சேகர், நோயல் சீன், சீனிவாச ரெட்டி, சிவன்நாராயண நரிபெட்டி, தேவதர்ஷினி, ராஜீவ் கனகலா, தன்ராஜ், ஸ்ரீ சிம்ஹா, ஆர்.கே., ஹம்சா நந்தினி, பைத்தியம் மோகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

தமிழ் மொழியில் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த நான் ஈ ஃபேண்டசி ஆக்‌ஷன் படமாக வெளியானது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மொழியிலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்:

நான் ஈ படத்தில் உயிரிழந்த நடிகர் நானியின் ஆத்மா ஈ-யாக மறுபிறவி எடுத்து வந்து தன்னை கொலை செய்தவர்களை எப்படி எல்லாம் பழி வாங்குகிறது என்பதே படத்தின் கதை. தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 14 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… ரஜினிகாந்த் சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிளாஸ்ட் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ

Follow Us