AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2: ஒன் நேம்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட தீம் பாடலை வெளியிட்ட அனிருத்!

One Name Theme Song: கோலிவுட் சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படமாக இருந்துவருவதுதான் ஜெயிலர் 2. இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இப்பட தீம் பாடலான ஒன் நேம் என்ற பாடலை அனிருத் தற்போது வெளியிட்டுள்ளார்.

Jailer 2: ஒன் நேம்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட தீம் பாடலை வெளியிட்ட அனிருத்!
ஒன் நேம் தீம் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jul 2026 20:11 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Suparstar Rajinikanth) முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறுவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், இன்னும் சில காட்சிங்களுக்கான படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறதாம். இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கிவருகிறார். இப்படம் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், அதில் நடித்த பல்வேறு பிரபலங்கள் இதிலும் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முதல் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu) வரை பல்வேறு உச்ச நடிகர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி, வீடியோவுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த “ஒன் நேம் “பாடல் வைரலானது. தற்போது அந்த பாடல் முழுவதையும் அனிருத் பகிர்ந்துள்ளார். தற்போது வெளியான இந்த தீம் பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 61வது வயத்தில் மூன்றாவது திருமணம் செய்யும் ஆமீர் கான்… எப்போது தெரியுமா?

ஜெயிலர் 2 பட ஒன் நேம் தீம் பாடலை பகிர்ந்த இசையமைப்பாளர் அனிருத் :

ஜெயிலர் 2 படத்துடன் மோதும் புது படங்கள் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, அவருடன் மோகன்லால், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவரும் நிலையில், இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் தமிழ் முதல் இந்தி வரை பல்வேறு மொழி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு!

மேலும் தனுஷின் ஓம் பட ரிலீஸ் தேதி அக்டோபர் 16 என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை படக்குழு ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சேயோன் படத்தின் ரிலீஸும் அப்போதே இருக்கும் என கூறப்பட்ட நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகிறதாம். ஆக மொத்தத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படமானது சிங்கிளாக வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us