பிளாஸ்ட் பட இயக்குநருடன் இணையும் சியான் விக்ரம்? – வைரலாகும் தகவல்!
Chiyaan Vikrams Next: நடிகர் அர்ஜுன், பிரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமியின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் சுபாஷ் கே ராஜ். இவர் சியான் விக்ரமை வைத்து புது படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் நடிப்பில் ஆண்டுக்கு 1 படம் வெளியாகிவருவது வழக்கமே. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் வீர தீர சூரன் 2 (Veer Dheera Sooran 2) என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் தற்போது இவர் இயக்குநர் ஆனந்த் சங்கர் (Anand Shankar) இயக்கத்தில், சியான்63 படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் ஆனந்த் சங்கர் மற்றும் சியான் விக்ரமின் கூட்டணியில் ஏற்கனவே இருமுகன் என்ற படம் வெளியாகியிருக்கிறது. அதனை தொடர்ந்து 2வது முறையாக இவர்கள் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ரியா ஷிபு (Riya Shibu) நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவர் தற்போது பிளாஸ்ட் (Blast Movie) பட இயக்குநர் சுபாஷ் கே ராஜ் (Subhash K Raj) இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறதாம்.




இதையும் படிங்க: ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது சக்குரா நிக்குரா பாடல் வீடியோ
இணைகிறதா விக்ரம் மற்றும் பிளாஸ்ட் பட இயக்குநரின் கூட்டணி:
கடந்த 2026ம் ஆண்டு ஜூன் தொடக்கத்தில் வெளியான படம் பிளாஸ்ட். இதில் அர்ஜுன், அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் அர்ஜுன் நடித்திருந்த வேடத்தில், ஆரம்பத்தில் விக்ரம்தான் நடிக்கவேண்டியதாம். ஆனால் அவர் இதில் நடிக்கவில்லை. அதன்பிறகே அர்ஜுன் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!
மேலும் பிளாஸ்ட் பட இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தற்போது விக்ரமிற்காக கதை ஒன்றை எழுதியுள்ளாராம். அதை அவரிடம் கூறியுள்ளாராம். பிளாஸ்ட் பட வெற்றியை அடுத்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதற்காக கார்த்தியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சுபாஷ் கே ராஜ் புது திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
As per Valaipechu,#ChiyaanVikram in talks with #Blast Director SubashKRaj for a film💥. They also says Initial choice of Arjun’s character in Blast was ChiyaanVikram. But later on Arjun was onboarded
Also Blast Director locked his Next film with same AGS Production, #Karthi is… pic.twitter.com/Xm9wAftvDs
— AmuthaBharathi (@CinemaWithAB) July 1, 2026
இவர் கார்த்தி மற்றும் விக்ரம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், இதில் யாருடனாவது நிச்சயம் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.