Chiyaan Vikram: நான் அப்போதே ஹீரோவாகவேண்டும் என ஆசைப்பட்டேன் – கலகலப்பாக சியான் விக்ரம் பகிர்ந்த விஷயம்!
Chiyaan Vikrams Actor Dream : தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராக இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் அவர் ஹீரோவாகவேண்டும் என எப்போதிருந்து ஆசைப்பட்டார் என்பது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு சியான் (Chiyaan) என்று அழைக்கப்படுபவர் விக்ரம் (Vikram). இவர் சினிமவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பிலும் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த இரு மொழிகளிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்தார். தொடக்கத்தில் இவர் நடித்திருந்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. அவ்வாறு இருந்தாலும் தொடர்ந்து தனது விடாமுயற்சியின் காரணமாக படங்களில் நடித்துக்கொண்டே வந்தார். அவ்வாறு நடிக்கையில், இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தப்படும் சேது (Sethu).
1999ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் பாலா (Bala) இயக்கியிருந்த நிலையில், விக்ரமிற்கு ஒரு திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. இதை அடுத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க தொடங்கியிருந்தார். இந்நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த விக்ரம், அவர் எப்போது இருந்து நடிகராக படங்களில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: நான் அதற்காகவே கார்த்தியின் பருத்திவீரன் படத்தை பார்த்தேன் – தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
ஹீரோவாக ஆசைப்பட்டது குறித்து கலகலப்பாக பகிர்ந்த விக்ரம்:
பேட்டி ஒன்றில் சியான் விக்ரமிடம் தொகுப்பாளர், “நீங்கள் எப்போதிருந்து நடிகற்கவேண்டும் என ஆசைப்பட்டீங்க?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரம், “3 மாதத்திலிருந்தே, என் அம்மா வயிற்றில் நான் மூன்று மாத கருவாகி இருக்கும்போதே ஹீரோவாகவேண்டும் என நினைத்தேன்” என கலகலப்பாக பேசினார். மேலும் அதில் அவர்,” நான் சிறுவயதிலே சினிமாவில் ஹீரோவாவேண்டும் என ஆசைப்பட்டேன்” என தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை – பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
சியான் விக்ரமின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை விக்ரமின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 படம் வெளியானது. இடத்தியடுத்து கிட்டத்தட்ட 3 படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானார். அந்த வகையில் தற்போது இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சியான்63 என்ற படத்தில் நடிக்கிறாரா. இதில் அவருக்கு ஜோடியாக சர்வம் மாயா பட நடிகை ரியா ஷிபு நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.