RJ Balaji: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை – பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji About Suriya: இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் இயக்கத்தில் கருப்பு திரைப்படமானது வெளியாகி திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகிய சமயத்தில் சூர்யா சார், கருப்பு படத்தை பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் 2026ம் ஆண்டில் முதல் பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளதுதான் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா (Trisha) இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தை இயக்குநரும், பிரபல நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன், தெய்வீகம் மற்றும் நீதி போன்ற கதைக்களத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட 15 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது. இப்படமானது சூர்யாவிற்கு மிக பிரம்மாண்டமான வெற்றி படமாக அமைந்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இப்படம் உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கருப்பு பட வெற்றியை தொடர்ந்து, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கலந்துகொண்டிருந்தனர். அப்போது பேசிய அவர், கருப்பு படம் வெளியான சமயத்தில் சூர்யா திரையரங்கில் சென்று பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: தெலுங்கில் பிரபல இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!.. அட இவரா?
கருப்பு படத்தை சூர்யா பார்க்காதது குறித்து வெளிப்படையாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி:
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “என்னோட படக்குழு அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்தனர். ஆனால் சூர்யா சார் படத்தை பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகே திரையரங்கில் சென்று கருப்பு படத்தை பார்த்தார். அதுவும் நான் அவரை கட்டாயப்படுத்தினேன். சூர்யா சார், சாதாரணமாக தான் நடிக்கும் படத்தின் ரிலீஸின்போது திரையரங்குகளில் சென்று பார்க்கமாட்டார்.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்
மேலும் ரிலீசிற்கு பிறகும் தியேட்டரில் சென்று பார்க்கமாட்டாரு. அதோ ஒரு நம்பிக்கையில் அவர் பார்க்கவே இல்லை. படத்தை பார்த்தபிறகு நான் மற்றும் எனது படக்குழு சொன்னது பற்றியே சூர்யா சார் படம் நல்ல இருக்குனு தெரிஞ்சிக்கிட்டாரு என அதில் அவர் கூறியிருந்தார்.
சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The ONE @Suriya_offl‘s biggest BLAST at the box office 💥#Karuppu grosses 300 crores worldwide, a mega blockbuster!
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar Musical.
A @dop_gkvishnu Visuals.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @prabhu_sr #Indrans… pic.twitter.com/fQPZQUELK0— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 29, 2026
சூர்யாவின் கருப்பு படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், இன்னும் வார இறுதியில் நல்ல வசூலை பெரும் என கூறப்படுகிறது. நிச்சயம் இப்படம் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூலிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.