AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கில் பிரபல இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!.. அட இவரா?

Mamitha Baijus Grand Telugu Debut: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், முழுமையாக தெலுங்கில் திரைப்படம் ஒன்றில், பிரபல இசையமைப்பாளருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.

தெலுங்கில் பிரபல இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!.. அட இவரா?
மமிதா பைஜூImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 May 2026 20:25 PM IST

தமிழ் மற்றும் மலையாளம் மக்கள் மத்தியில் இளம் சென்சேஷனல் நடிகையாக இருந்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில், தளபதி விஜய் (Thalapathy Vijay), சூர்யா (Suriya) மற்றும் தனுஷ் உட்பட பல்வேறு உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டியூட் (Dude) என்ற படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நாடிர்த்து ஹிட் கொடுத்திருந்தார். இந்த வரிசையில் தமிழில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் வெளியாகியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மமிதா நடித்துவரும் நிலையில், தற்போது தெலுங்கில் நேரடியாக படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளாராம். பிரபல இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும் – கியாரா அத்வானி

தெலுங்கில் இசையமைப்பாளருக்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜூ:

நடிகை மமிதா பைஜூ, தெலுங்கில் எல்லம்மா என்ற படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளாராம். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நிலையில், அவர் நடிக்கும் முதல் படம்தான் எல்லம்மா. இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக மமிதா நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: கருப்பனின் பேயாட்டம்.. பரிமளா & கோ பட ரிலீஸ் தேதி மாற்ற காரணம் இதுதான் – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!

ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இது உண்மையானால் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் முதல் தெலுங்கு நேரடி திரைப்படமாக எல்லம்மா திரைப்படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லம்மா திரைப்படம் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழிலும் தளபதி விஜய் முதல் சூர்யா போன்ற பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் இயக்குநர் வேணு எல்டண்டி இயக்கத்தில், எல்லம்மா என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதில் மமிதா பைஜூ நாயகியாக நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us