AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் ராஜேஷ் ஓபன் டாக்

Jollya Irundha Oruthan Movie Update: நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் தற்போது இயக்கி வரும் படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இவர்களின் கூட்டணியில் முன்னதாக வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் ராஜேஷ் ஓபன் டாக்
ஜாலியா இருந்த ஒருத்தன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 13:53 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் ராஜேஷ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலமான இயக்குநராக இருப்பவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் ஜீவா மற்றும் சந்தானத்தின் காம்போ படத்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து ஜாலியனா படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்படி பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதியாக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்ஹ்டில் வெளியான படம் ப்ரதர். நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் மீண்டும் ஜீவா உடன் இணைந்து ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான்:

இந்த நிலையில் இயக்குநர் எம்.ராஜேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில் ஜாஇயா இருந்த ஒருத்தன் படம் குறித்து பேசியுள்ளா. அதில், காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலில் விழுவதற்கும், இறுதியில் திருமணம் செய்துகொள்வதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தையே இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. இந்தப் படத்தில், அந்த குறிப்பிட்ட காலகட்டத்தை நான் விரிவாக ஆராய்ந்துள்ளேன். இன்றைய தலைமுறையில், காதல் என்பது வெகுவாகவே மாறிவிட்டது. ஒரு உறவு தொடங்கி, அது திருமணத்தில் முடியும் வரையிலான காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகள், சுவாரஸ்யமான தருணங்கள் மற்றும் சிக்கல்கள் ஆகிய அனைத்தும், நவீனமான மற்றும் நகைச்சுவையான பாணியில் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் ராஜேஷ் பேச்சு:

Also Read… Karuppu: கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?

Follow Us