AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி… கொண்டாடிய பிரபல இயக்குநர்கள்

25 Years Of Lingusamy | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை இயக்குநர்கள் பலர் கூடு கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி… கொண்டாடிய பிரபல இயக்குநர்கள்
லிங்குசாமி உடன் பிரபல் இயக்குநர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2026 10:44 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆனந்தம். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்த ஆனந்தம் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நங்கூரம் போல பதித்தாந்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் மாதவன், அஜித் குமார், விஷால், விக்ரம், கார்த்தி, ஆர்யா மற்றும் சூர்யா என பலர் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி அவ்வபோது படங்களை தயாரித்தும் வருகின்றனார்.

சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி:

இந்த நிலையில் நேற்று ஆனந்தம் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவடைந்தது. மேலும் இயக்குநர் லிங்குசாமி திரையுலகில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கோலிவுட் சினிமாவில் உள்ள இயக்குநர்கள் பலர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதன்படி திரையுலகில் 25 ஆண்டுகளை கடந்த லிங்குசாமியை கொண்டாட கோலிவுட் இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இயக்குநர் லிங்குசாமி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவரும் நன்றியையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் – வைரலாகும் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபகத் பாசில் – பிரேம் குமார் பட ஷூட்டிங்

Follow Us