AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபகத் பாசில் – பிரேம் குமார் பட ஷூட்டிங்

Fahadh Faasil and Director Prem kumar movie shooting update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ஃபகத் பாசில் தற்போது பிரபல இயக்குநராக உள்ள பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த அப்டேட்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபகத் பாசில் – பிரேம் குமார் பட ஷூட்டிங்
ஃபகத் பாசில் - பிரேம் குமார்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 May 2026 15:43 PM IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பாசிலின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ஃபகத் பாசில். இவர் நாயகனாக அறிமுகம் ஆன படம் மலையாள சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. மேலும் இயக்குநர் பாசிலின் மகன் என்பதால் ஃபகத் பாசில் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்து இருந்ததுதான் இந்த ட்ரோலுக்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் அவரது நடிப்பு மற்றும் படம் சரியில்லை என்றும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் வெளி நாட்டிற்கு சென்று நடிப்பு சம்பந்தமாகவும் சினிமா சம்மந்தமாகவும் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் வந்து நடித்த போது அவரை நெகட்டிவாக விமர்சித்த வாய்கள் அனைத்தும் அடைத்து போகும் அளவிற்கு இருந்தது.

தொடர்ந்து மலையாள சினிமாவில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் ஃபகத் பாசிலின் படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அவரது நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களை ஏற்று நடித்து வருகிறார் நடிகர் ஃபகத் பாசில்.

விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபஃப – பிரேம் குமார் பட ஷூட்டிங்:

ஃபகத் பாசில் மற்றும் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குப் பிறகு, படப்பிடிப்பு தமிழகத்திற்கு மாற்றப்படவுள்ளது. முழுப் படத்தையும் 40 முதல் 50 நாட்களுக்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது வலுவான உணர்வுபூர்வமான மையக்கருவைக் கொண்ட, முழுமையான ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று கூறப்படுகிறது; இதில் நடிகை ஷிவதா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 40 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஃபஹத் ஃபாசில் தனது சம்பளமாக 15 கோடி ரூபாயும், இயக்குனர் பிரேம்குமார் 3 கோடி ரூபாயும், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா 2 கோடி ரூபாயும் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியிருக்கும் 20 கோடி ரூபாய், நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் ஒட்டுமொத்தத் தயாரிப்புச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read… சும்மா ஜாலியா ஒரு மேட்ச்… இணையத்தில் வைரலாகும் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தை அவர்களுக்காகதான் உருவாக்கினேன் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

Follow Us