AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலப்பட உணவு முதல் தவறான லேபிள் வரை… FSSAI செயலியில் புகார் அளிப்பது எப்படி?

புகார் பதிவு செய்யப்பட்டவுடன் தனித்துவமான கண்காணிப்பு எண் வழங்கப்படும். அதன் மூலம் புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம். புகார் தொடர்புடைய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். நடவடிக்கையில் திருப்தி இல்லையெனில், செயலியில் உள்ள "Re-raise Complaint" வசதி மூலம் மேல்மட்ட அதிகாரிகளிடம் மீண்டும் முறையிடவும் முடியும்.

கலப்பட உணவு முதல் தவறான லேபிள் வரை… FSSAI செயலியில் புகார் அளிப்பது எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jul 2026 20:08 PM IST

ஜூலை 13, 2026: உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பற்ற உணவுகள் மற்றும் உணவகங்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள “ஃபுட் சேஃப்டி கனெக்ட்” மொபைல் செயலி மூலம், உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாசுபட்ட முட்டை, பால் மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த நுகர்வோர் புகார்களின் அடிப்படையில், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) நிறுவனத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய நடவடிக்கைகள்:

அண்மையில், லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் கலப்படம் நடந்ததாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆலைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்அதிகாரிகள் சீல் வைத்து, சந்தேகத்திற்குரிய பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும், அங்கீகாரம் பெறாத சுவையூட்டிகளை பயன்படுத்தியது மற்றும் தவறான விளம்பரக் கூற்றுகளை வெளியிட்டதாக சில மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும், விதிமுறைகளை மீறி தங்களது தயாரிப்புகளை “எனர்ஜி டிரிங்க்” என விளம்பரப்படுத்தியதாக சில பான உற்பத்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதலில் ஹனிமூன் கோச்.. இப்போ மத சடங்கு.. இணையத்தில் வைரல் வீடியோ – ரயில்வே துறை கொடுத்த விளக்கம்..

அதேபோல், லோட்டே இந்தியா, ஃபெர்ன்ஸ் என் பெட்டல்ஸ், குபேரா ஃபுட்ஸ், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தவறான லேபிள்கள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

என்னென்ன புகார்கள் அளிக்கலாம்?

ஃபுட் சேஃப்டி கனெக்ட் செயலி மூலம்,

  • கலப்பட உணவுகள்,
  • காலாவதியான உணவுப் பொருட்கள்,
  • சுகாதாரமற்ற உணவகங்கள்,
  • தவறான லேபிள்கள்,
  • தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்,
  • உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள்

போன்றவற்றை பொதுமக்கள் புகாரளிக்கலாம். மேலும், குறிப்பிட்ட உணவகத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உரிமம் அல்லது பதிவு உள்ளதா என்பதையும் இந்த செயலி மூலம் சரிபார்க்க முடியும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் வெளியிடும் அறிவுறுத்தல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

புகார் அளிப்பது எப்படி?

ஃபுட் சேஃப்டி கனெக்ட் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அல்லது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் -யின் இணையதளம் மூலமும் புகார் அளிக்கலாம். பின்னர், புதிய புகார் பதிவு செய்யும் வசதியைத் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உரிம எண் (தெரிந்திருந்தால்) உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின், புகாரின் தன்மை குறித்து விளக்கமாக எழுதி, புகைப்படம், வீடியோ அல்லது ஆவணங்கள் போன்ற ஆதாரங்களையும் இணைத்து சமர்ப்பிக்கலாம்.

புகார் பதிவு செய்யப்பட்டவுடன் தனித்துவமான கண்காணிப்பு எண் வழங்கப்படும். அதன் மூலம் புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம். புகார் தொடர்புடைய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். நடவடிக்கையில் திருப்தி இல்லையெனில், செயலியில் உள்ள “Re-raise Complaint” வசதி மூலம் மேல்மட்ட அதிகாரிகளிடம் மீண்டும் முறையிடவும் முடியும்.

Follow Us