Team India: 967 நாட்களுக்குப் பிறகு முதல் முறை! இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் நடக்கப்போகும் சம்பவம்!
IND vs ENG ODI Series: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, 2026 ஜூலை 14ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் முதல் முறையாக ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த 967 நாட்கள் அல்லது 32 மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது நடக்கவில்லை. இந்திய அணிக்காக, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஒன்றாக விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு (England Cricket Team) எதிரான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி தற்போது ஒருநாள் தொடருக்குத் தயாராகியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நாளை அதாவது 2026 ஜூலை 14ம் தேதி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடர் தோல்விக்கு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) பழிவாங்க முயற்சிக்கும். இந்நிலையில், பர்மிங்காமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடக்கவுள்ளது. கடைசியாக இது 967 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. தற்போது, 32 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இது மீண்டும் நிகழவுள்ளது.
ALSO READ: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?
967 நாட்களுக்கு முன்பு..
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, 2026 ஜூலை 14ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் முதல் முறையாக ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த 967 நாட்கள் அல்லது 32 மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது நடக்கவில்லை. இந்திய அணிக்காக, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 967 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக விளையாட உள்ளனர். இதனால், பர்மிங்காம் ஒருநாள் போட்டி குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. புகழ்பெற்ற இந்திய வீரர்களான ரோஹித்-விராட் மற்றும் பும்ரா, கடைசியாக 2023 நவம்பர் 19 அன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இணைந்து விளையாடினர். அப்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.




தற்போது, 967 நாட்களுக்குப் பிறகு, மூவரும் ஒன்றாக ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதன்மூலம், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன என்று உறுதியாகக் கூறலாம். முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் ரோஹித், கோலி மற்றும் பும்ரா இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருநாள் தொடரை வெல்வதற்கும், டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த மூவர் கூட்டணி சிறப்பாக செயல்பட வேண்டும்.
ALSO READ: பெரிய மைல்கற்கள் கைகளில்.. படைப்பார்களா ரோஹித், கோலி..?
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த மூவரும் ஒருநாள் போட்டிகளில் ஒன்றாக விளையாடாததற்குப் பல காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் காயங்கள் காரணமாகவும், சில சமயங்களில் பணிச்சுமை மேலாண்மை காரணமாகவும், இந்த மூவரும் ஒருநாள் தொடர்களில் ஒன்றாக விளையாடவில்லை. ஆனால், அடுத்தகட்டத் தயாரிப்புக்காக இந்த மூவரும் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.