பெரம்பூரை மாற்ற போகும் டிஜிட்டல் புரட்சி.. அரசுடன் நேரடி கனெக்ட்.. மக்கள் சேவை தளம் செயலி செயல்படும் விதம்!
Makkal Sevai Thalam App : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மக்கள் சேவை தளம் என்ற செல்போன் செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி எவ்வாறு செயல்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களின் வசதிக்காக மக்கள் சேவை தளம் என்ற மொபைல் செயலியை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த செயலி எவ்வாறு செயல்படும், எப்படி அணுகுவது, புதிய திட்டங்கள், கோரிக்கைகள், புகார்கள் எப்படி அளிப்பது என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் சேவை தளம் என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ( ஆண்ட்ராய்டு)) டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதில், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். மேலும், தொகுதி தேவை, மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்பாக இந்த செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், அரசின் நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அந்த திட்டத்துக்கு தகுதியானவர் யார் யார்.
விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்
இதற்கு விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளலாம். அத்துடன், இந்த விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்கள் மற்றும் திட்டங்கள், தேவைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை தொடர்பான அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த நிலை உள்ளிட்டவற்றை இந்த செயலின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பெரம்பூர் தொகுதி மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் அடிப்படையில் இந்த மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
மக்கள் சேவை தளம் செயலி எதற்காக
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை தக்க வைத்திருந்தார். இந்த நிலையில், இரு தொகுதிகளும் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்த தொகுதி மக்களுக்காக அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் மக்கள் சேவை தளம் என்ற செயலியை தொடங்கி வைத்துள்ளார்.
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் வந்திருந்தார். அப்போது, பெரம்பூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம். எல். ஏ. அலுவலகம் மற்றும் இ- சேவை மையம் ஆகியவற்றை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது, பெரம்பூர் தொகுதி மக்கள் அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் “மக்கள் சேவை தளம்” என்ற செல்போன் செயலியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 100- க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். அத்துடன் குடிமைப் பொருட்களையும் முதல்வர் விஜய் வழங்கினார்.
மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!