AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

CM Vijay Inaugurated Ration Cards: தமிழகம் முழுவதும் 73 ஆயிரம் குடும்ப அட்டைகளை வழங்கும் பணிகளை முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியில் தொடங்கி வைத்தார். அங்கு முதல் கட்டமாக 10 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார்.

மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
ரேஷன் அட்டை விநியோகம் தொடக்கம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Jul 2026 17:39 PM IST

தமிழக முதல்வர் விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூரில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று இருந்தார். அப்போது, பெரம்பூர் பகுதியில் உள்ள வியாசர்பாடி ரேசன் கடையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, அவர் தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ள சுமார் 73 ஆயிரம் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதில், முதல் கட்டமாக சுமார் 10 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை முதல்வர் விஜய் வழங்கினார். இதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை முதல்வர் விஜய் தனது கைகளால் வழங்கினார். இதை தொடர்ந்து, ரேசன் கடையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம்

அப்போது, ரேஷன் கடையின் நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து குடிமைப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, ரேசன் கடையில் உணவு பொருட்கள் வழங்குவது மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளை பதிவு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ரேஷன் கடையின் ஊழியர் விளக்கம் அளித்தார். இதனை முதல்வர் கேட்டுக் கொண்டார். தற்போது, முதல்வர் ஜோசப் விஜயால் தொடங்கி வைக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி, இந்த மாத இறுதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய ரேஷன் அட்டை கோரி 6 லட்சம் விண்ணப்பங்கள்

முன்னதாக ரேஷன் கடைக்கு வந்த முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அன்னபூரணி சிலையை குடிமைப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கடா ரமணன் வழங்கினார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா வரவேற்றார். தமிழகத்தில் மொத்தம் 38,424 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில், 3 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய ரேஷன் அட்டைகள் அச்சிடும் பணியில் இருந்து வருவதாகவும், மீதமுள்ள 3 ரேஷன் அட்டை காண விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாக துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மாத இறுதிக்குள் ரேஷன் அட்டைகள் விநியோகம்

விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் எனவும், இல்லையெனில் அந்தந்த தாலுகா அலுவலகங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் விஜய் சுமார் 73 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகளை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த ரேஷன் அட்டைகள் அனைத்தும் உரிய பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us