நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!
Nellai And Tenkasi Power Outage : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதில், எந்த இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. எந்த நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறுது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி ஏ. எம். ஆர். எல். துணை மின் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை ( ஜூலை 14- ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, நெல்லை மாவட்டம், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாங்குநேரி ஏ. எம். ஆர். எல். துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக துணை மின் நிலைய எல்லை உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நெல்லையில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை
நாங்குநேரி, சிறுமளஞ்சி, ராஜக்கள் மங்கலம், பெருமளஞ்சி, பெருமளஞ்சி மேல் ஊர், பெருமளஞ்சி கீழ் ஊர், ஆச்சியூர், கோவனேரி, வாகைகுளம், ஏ. எம். ஆர். எல். தொழிற்கூடம் ஆகிய இடங்களில் நாளை மின்வெத்தம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் தங்களது பணிகளை முன் கூட்டியே திட்டமிட வேண்டும், அத்துடன் மின் நிறுத்தத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே போல, தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ( ஜூலை 14- ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க: பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..




தென்காசியில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்
இதன் காரணமாக தென்காசி புதிய பேருந்து நிலையம், சக்தி நகர், மங்கம்மாள் சாலை பகுதிகள், ஹவுசிங் போர்டு காலனி, காளிதாசன் நகர், கீழப்புலியூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அத்துடன், மின் நிறுத்தம் செய்யப்படுவதற்கு மின்சார துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: குதிரை பேரத்தில் ஈடுபடும் த.வெ.க அரசு.. 18ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..