AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jason Sanjay: ஹீரோவாக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவர்தான்!

Jason Sanjay Actor Debut: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றிருப்பவர் விஜய். இவரின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இன்னும் இப்படம் வெளியாகாத நிலையில், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jason Sanjay: ஹீரோவாக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவர்தான்!
ஹீரோ அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Jul 2026 17:20 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவந்தவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 69 படங்கள் உருவாகியிருக்கிறது. அதில், இன்னும் அவர் நடித்திருந்த கடைசி படமான ஜன நாயகன் (Jana Nayagan) இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு சென்சார் கிடைத்திருந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் தற்போது சினிமாவிலிருந்து மொத்தமாக விலகி, அரசியலில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், அவரின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார், சந்தீப் கிஷனின் (Sundeep Kishan) நடிப்பிலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம்தான் சிக்மா (Sigma).

இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் நிலையில், தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளாராம். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஆக்ஷன் திரில்லர் பாணியில்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்:

முதல்வர் விஜய்யின் மகனாக இருந்து, பின் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்தான் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சிக்மாஎன்ற படம் தயாராகியுள்ளது. இதையடுத்து தற்போது சினிமாவில், தனது தந்தை விஜயை போலவே ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். இவர் பிரபல இயக்குநரின் இயக்கத்தில், ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: சமந்தாவின் ரூ 100 கோடி சம்பவம்.. மா இன்டி பங்காரம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியமா? – வெளியான அறிவிப்பு இதோ

இதை சிக்மா பட தயாரிப்பாளர் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை. ஒருவேளை இது உண்மையானால் ஜேசன் சஞ்சய்க்கு அதிக வரவேற்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் ஹீரோ அறிமுகம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிப்போகும் ஜேசன் சஞ்சயின் சிக்மா :

சிக்மா படத்தில், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா இணைந்து நடிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விதத்தில், அதற்கு ஒரு வாரம் முன் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜூலை 31ம் தேதியில் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us