ஜேசன் சஞ்சயை ஸ்கூல் படிக்கும் போது கடத்திய நடிகர் – வைரலாகும் வீடியோ!
Thalapathy Vijay Son Jason Sanjay Recall His Childhood Memory | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது முதலமைச்சராக உள்ள தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக எண்ட்ரி கொடுத்து உள்ளார் ஜேசன் சஞ்சய். இவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் பேரனும் நடிகர் தளபதி விஜயின் மகனாகவும் தற்போது தமிழ் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி திரைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள லைகா புரடெக்ஷன் தயாரித்து உள்ளது. அதன்படி சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்து வெளியீட்டிற்காக தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாகவும் நடிகை ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ஜேசன் சஞ்சயின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜேசன் சஞ்சயை ஸ்கூல் படிக்கும் போது கடத்திய நடிகர் ஜெமினி மணி:
இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி மணி நடித்துள்ள நிலையில் அவர் ஜேசன் சஞ்சய் சிறு வயதில் பள்ளியில் படித்த போது தளபதி விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜேசனை கடத்தியது குறித்து பேசி இருந்தார். அதன்படி ஜெமினி மணி முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது ஜேசன் சஞ்சய் படித்த பள்ளியில் தனது முதலாளியின் குழந்தையும் படித்து வந்ததாகவும் அவரை அழைக்க செல்லும் போது எல்லாம் ஜேசன் சஞ்சயை பார்த்து வந்துள்ளார். ஜேசனை அழைப்பதற்காக பள்ளிக்கு தளபதி விஜய் வரும் போது அவரை பார்க்க வேண்டும் என்று ஒரு பரபரப்பான விசயத்தை செய்துள்ளார்.
பொதுவாக பள்ளி முடிந்ததும் அவரை விஜய் அழைக்க வரும் போது பள்ளியின் வாட்ச்மேன் ஜேசனை அழைத்து கார் வரை கூட்டிச் சென்று விடுவது வழக்கம். இந்த ரொட்டீனை ஒரு வருடமாக பார்த்து வந்த ஜெமினி மணி ஒரு நாள் தளபதி விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாட்ச்மேனை தள்ளிவிட்டு ஜேசனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது ஜேசன் ஜெமினி மணியை அடித்து விடு என்று கத்தினாலும் நேராக தளபதி விஜயின் கார் அருகே சென்று விட்டுள்ளார். அப்போது விஜய் ஏன் என்று சிரித்துக்கொண்டே கேட்டதாகவும் ஜெமினி மணி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெமினி மணி ஜேசனின் சிக்மா படத்தில் நடித்த போது இந்த சம்பவத்தை ஜேசனுக்கு நினைவு இருக்கா என்று கேட்க ஜேசனும் அது நீங்கதான என்று பேசியுள்ளார். இதனை ஜெமினி மணியின் மகனிடம் ஜேசன் சஞ்சய் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பயத்தின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது… பீட்சா 4 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் பேச்சு:
A Cute & Fun Video of #JasonSanjay interacting with a kid😄♥️
Hearing his voice after very long. So calm & down to earth 👌🥰pic.twitter.com/dC8lLdb7b1
— AmuthaBharathi (@CinemaWithAB) June 30, 2026
Also Read… இயக்குநர் சுதா கொங்கராவால் அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு வந்த சிக்கல் – என்ன நடந்தது தெரியுமா?